Published : 19 Oct 2016 02:32 PM
Last Updated : 19 Oct 2016 02:32 PM
இந்தியா சுமார் 3000 ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களுக்குத் தாயகமாக விளங்கி வருகிறது. அவற்றில் 90 சதவீத காண்டாமிருகங்கள் அசாமின் காசிரங்கா தேசியப் பூங்காவில் வசித்து வருகின்றன.
காசிரங்கா பூங்கா, பிரம்மபுத்ராவின் வெள்ளச் சமவெளியில் அமைந்திருக்கிறது. இப்பூங்கா யுனெஸ்கோ வரலாற்றுப் பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாகவும் இருக்கிறது.
இந்த ஆண்டு அசாமில் ஏற்பட்ட வெள்ளத்தால், ஏராளமான காண்டாமிருகங்கள் நீரில் மூழ்கிவிட்டன. சில இடம்பெயர்ந்துவிட்டன. வெள்ளத்தால் தங்கள் வாழ்விடத்தை இழந்த காண்டாமிருகங்கள் அதைக்காட்டிலும் முக்கியப் பிரச்சனையைச் சந்தித்து வருகின்றன. அது காண்டாமிருக வேட்டை.
கெரட்டின் என்னும் பொருள் நிறைந்துள்ள காண்டாமிருக கொம்புகளுக்கு கள்ளச்சந்தையில் ஏகப்பட்ட கிராக்கி. இவை மருந்து தயாரிக்கவும், குத்துவாள், கத்தி உள்ளிட்டவைகளை அலங்காரப் பொருள்களாக உருவாக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. அதனால் இவை முறைகேடான வழியில் விற்கப்படுகின்றன.
கடந்த 10 வருடங்களில் காண்டாமிருகங்களின் எண்ணிக்கை சுமார் 27% உயர்ந்திருந்தாலும், அவை இன்னமும் ஆபத்தான சூழலிலேயே இருக்கின்றன. தொடர்ந்த மிருக வேட்டை, நகரமயமாதல், சுற்றுச்சூழல் சீர்கேடு ஆகியவற்றால், காண்டாமிருகங்கள் அழியும் விளிம்பில் இருக்கின்றன.
இதுகுறித்த தகவல் தொகுப்புக் காணொலி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT