Published : 22 Oct 2016 10:01 AM
Last Updated : 22 Oct 2016 10:01 AM
அன்று அலுவலகத்தி லிருந்து வரும்போதே மிகவும் சந்தோஷமாக இருந்தார் அகிலன்.
“கல்பனா..! போனஸ் வந்தி டுச்சு.. தீபாவளி செலவுக்கு பட்ஜெட் போடுவோம். ஜவுளிக் கடையில பழைய பாக்கியை அடைச்சிடுறேன். தீபா, விஷ்ணு..! லேட்டஸ்டாக வந்த டிசைன்ல உங்களுக்கு என்ன பிடிக்குதோ வாங்கிக்கங்க.. கல்பனா..! ஹேண்ட்லூம்ல கிரடிட்ல உனக்கு பிடிச்ச பட்டு சேலை வாங்கிக்க. மாசாமாசம் என் சம்பளத்துல பிடிச்சுக்குவாங்க.”
“தீபாவளிக்கு முறுக்கும், அதிரசமும் பண்ணலாம்னு இருக் கேன். சொந்தக்காரங்களுக்கும், பிரண்ட்ஸ்க்கும் நிறைய கொடுக் கணும்..” என்றாள் கல்பனா.
“சரி.. மளிகைக்கடை பாக் கியை செட்டில் பண்ணிடுறேன். புதுசா என்னென்ன வேணும்னு லிஸ்ட் கொடு, வாங்கிடலாம்.”
விஷ்ணு குறுக்கிட்டான். “அம்மா..! நீங்க இன்னும் பழங்காலத்துலயே இருக்கீங்க. இப்போல்லாம் காசு கொடுத்தா கடையில விதவிதமா ஸ்வீட் வாங்கிடலாம். அப்பா..! நான் ரொம்ப நாளா ஸ்மார்ட் போன் கேட்டுட்டு இருக்கேன்.”
“சரி.. இன்ஸ்டால்மென்ட்ல வாங்கிடலாம். அப்புறம் பட்டாசு, வெடி எல்லாம் உனக்கு வேணுங்கறத வாங்கிக்க.”
“அப்பா..! தீபாவளி அன் னைக்கு தியேட்டர்ல போய் ஒரு புது சினிமா பார்த்திடணும்..டிக்கெட் ரிசர்வ் பண்ணிடுங்க.”
“ஓ.கே.. ஜமாய்ச்சுடலாம்.. வரு ஷத்துல ஒரு நாள், எதிலே யும் குறை இல்லாமல் கொண் டாடிடலாம். தீபா.. நீ என்ன ஒண் ணும் பேச மாட்டேங்கற.. உனக்கு என்ன வேணும்..?” மகளைக் கேட்டார்.
சிறிது யோசனையுடன் சொன் னாள், கல்லூரியில் படிக்கும் மகள் தீபா.
“அப்பா..! வருஷத்தில் ஒரு நாள் கொண்டாடுறதுக்காக வரு ஷம் முழுவதும் சுமையை ஏத்திக் கணுமா..? முதல்ல நீங்க பைக் வாங்கின கடன், ஜவுளி, மளிகை பாக்கி எல்லாத்தையும் அடைச்சி டுங்க .. மீதி காசு இருந்தால் அதை வைத்து சிம்பிளா இந்த தீபாவளியை கொண்டாடுவோம்.. கடனுக்கு கட்டுற தவணைப் பணம் மிச்சமாகும். அதை வைத்து பின்னால் நமக்கு வேணுங்கறதை வாங்கிக்கலாம்...”
பொருளாதாரம் படிக்கும் மகளின் யதார்த்தமான பேச்சில் இருந்த உண்மை புரிந்தது அகிலனுக்கு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT