Published : 01 Oct 2016 04:14 PM
Last Updated : 01 Oct 2016 04:14 PM

யூடியூப் பகிர்வு: அசாமின் பாரம்பரிய முகா பட்டு!

அசாம் மாநிலத்தின் பாரம்பரிய அடையாளம் முகா பட்டு. பெரும்பாலான அசாம் மக்களின் பரம்பரைத் தொழிலும் அதுதான். இத்தொழில் 600 வருடங்களுக்கு மேல் அசாமை ஆண்ட அஹோம் வம்சத்தின் கீழ் பெரும் வளர்ச்சி அடைந்தது.

முகா பட்டு தயாரிப்பு அசாமின் வருமானம் கொழிக்கும் தொழில்களில் ஒன்றாகும். இத்தொழில் முழுக்க முழுக்க அசாம் பட்டுப்பூச்சிகளை சார்ந்திருக்கிறது. ஆயிரக்கணக்கான பூச்சிகளால்தான் ஒரு பட்டை உருவாக்க முடியும்.

பட்டு தயாரிப்பு

முதலில் பெண் தொழிலாளர்கள் பருவமடைந்த இரண்டு பூச்சிகளைத் தேர்ந்தெடுத்து அவற்றைக் குச்சியில் கட்டுகின்றனர். அவைகளோடு ஒரு ஆண் பூச்சியையும் சேர்த்துக் கட்டுவிடுகின்றனர். இதுபோல ஏராளமான பூச்சிகள் ஓரிடத்தில் திரட்டப்பட்டு கட்டப்படுகின்றன.

இரண்டு நாட்களுக்கு பெண் பூச்சிகள் முட்டையிடத் தொடங்குகின்றன. இரு நாட்களில் லார்வாக்கள் தோன்றத் தொடங்குகின்றன. பட்டுப்பூச்சிக் கூடுகள் ஒரு குறிப்பிட்ட முறையில், செங்குத்தாகக் கட்டப்படுகின்றன. இதன்மூலம் பூச்சிகள் அதிக சிரமமின்றி வெளியே வரமுடியும். பட்டுக்கூட்டில் இருந்து தேவையான அளவு பட்டு கிடைக்கும் வரை தொடர்ந்து இனப்பெருக்கம் நடைபெறுகிறது.

இத்தொழில் குறித்து அசாம் தொழிலதிபர்களும், பட்டுப்பூச்சி உற்பத்தியாளர்களும் என்ன சொல்கிறார்கள்? காணொலியைக் காண: