Last Updated : 15 Oct, 2016 06:41 PM

 

Published : 15 Oct 2016 06:41 PM
Last Updated : 15 Oct 2016 06:41 PM

யூடியூப் பகிர்வு: சிறகுகளின் ரணத்தை மாற்றும் ஸ்ருதி!

ஸ்ருதி ஹாசன் தான் ஒரு நடிகை என்பதைத் தாண்டி சுயசிந்தனையோடு வளர்ந்து சமூகத்தை அணுகுபவர் என்பது அவரது செயல்களிலேயே அவ்வப்போது தெரியக் கூடும். தந்தையின் மிகப்பெரிய ஒரு நட்சத்திர அந்தஸ்தை சலுகையாக எடுத்துக்கொள்ளாத தனித்த ஆளுமை என்பதாலேயே கோலிவுட் முதல் பாலிவுட் வரை ஸ்ருதியால் தன் இருப்பைப் பதிவு செய்ய முடிகிறது.

சொந்தக்காலில் நின்று பாலிவுட்டில் கவனம் ஈர்க்கும் ஸ்ருதி ஹாசன் பொது நிகழ்ச்சிகளுக்கு வரும்போதுகூட ஒரு பறவையின் சிறகடிப்பைப் போல விருப்பமான ஆடைகளில் வருபவர். அதுகூட கலைமனதின் ஓர் அழகுதான் என்று அங்கீகரிக்கத் தெரியாத இடத்தில் மனிதர்கள் இருப்பதுதான் சோகம். அவரது செல்போனுக்கு தவறான அழைப்புகளும் யூடியூப்களில் அவரது பொதுநிகழ்ச்சி ஆடை சுதந்திரத்தையும் படம்பிடித்துப்போடுவதும் இன்னும் நமது மக்களில் ஒரு பகுதியினர் வளர்ச்சியடையவில்லையோ என்றே எண்ணவேண்டியுள்ளது.

சுயநிர்ணய தேடலில் ஒரு முன்னுதாரணமாகத் திகழும் ஸ்ருதி Shruti Haasan Unblushed | Be The Bitch வீடியோவில் பொதுவாழ்வில் எதிர்கொள்ளும் தனது சவாலை வெகுநுட்பமாகப் பேசியுள்ளார்.

உலகம் எவ்வளவோ மாறியிருந்தாலும்கூட உலகின் பார்வையில் ஒரு பெண், அவள் எவ்வளவு சாதித்தாலும் அவள் பெண்தான் என்று ஒரு புள்ளியில் நிறுத்தி அவளைச் சுற்றி கோலம்போடுவதை இதைவிட யாராலும் கண்டிக்கமுடியாது.

அவர் வாக்கியத்துக்கு வாக்கியம் கெட்டதாக கருதப்படும் அந்த வார்த்தையை உதிர்ப்பது நம்மில் பலருக்கும் நெளிவடையச் செய்யலாம்.

ஆனால், தன் மனவலியின் விளைவாக தன்னை அறியாது கொட்டும் வெளிப்பாடு என்பதால் அதைக் கேட்பதற்கு நாம் கடமைப்பட்டுள்ளோம்!

அவரவர் சுதந்திரத்தின் எல்லை எது என்பதை அறிந்துகொள்ளவேண்டும். குறுகிய கண்ணோட்டத்திலிருந்து வெளியே வந்து பரந்துவிரிந்த பார்வையோடு கலைஞர்களைப் பார்க்கவேண்டும் என்று ஏங்கும் குரலை இந்த வீடியோவில் சன்னமாக நம் இதயத்தோடு பேசுவதை கேட்டுப்பாருங்கள் நிச்சயம் உங்கள் மனம் மாறும்.

இணைப்பு: