Published : 06 May 2016 06:56 PM
Last Updated : 06 May 2016 06:56 PM
எல்லோரும் எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில், இலவச செல்போன், ஸ்கூட்டருக்கு 50% மானியம், மின்கட்டண சலுகை உள்ளிட்ட அம்சங்களுடன் வெளியாகியிருக்கிறது அதிமுகவின் 2016 தேர்தல் அறிக்கை.
அதிமுக தேர்தல் அறிக்கை குறித்த நெட்டிசன்களின் கருத்து என்ன என்பது இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...
அதிமுக தேர்தல் அறிக்கை, திமுகவின் காப்பி: மு.க. ஸ்டாலின்- அட... ஒரு காப்பியே காப்பியை பற்றி பேசுகிறதே!
அதிமுக தேர்தல் அறிக்கை: தமிழக மக்களின் மீது கடன் சுமையை திணிக்கும் திட்டம்.
#அதிமுக தேர்தல் அறிக்கை... டார் டார்....!!!
ஆனா எல்லாம் நடக்குமா?
அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச கைபேசி- அதிமுக தேர்தல் அறிக்கை.
ரிங் டோன் மட்டும் "மாடு" கத்துற மாதிரி தருவாங்களா?
அதிமுக ஜெயிச்சால் கதாநாயகன் என்றும், தோற்றால் வில்லன் என்றும் வருணிக்கப்படப் போவது அதன் தேர்தல் அறிக்கை.
தேர்தல் அறிக்கை வந்தா நீங்க எல்லாமே காலின்னு சொன்னாங்க..
இங்க அறிக்கையே காலியா இருக்கு!
அனைத்து ரேசன் கார்டுக்கும் கைப்பேசி : அதிமுக தேர்தல் அறிக்கை.
>>அப்படியே மாசம் மாசம் ரீசார்ஜ் பண்ணி விடுவீங்களா?
தமிழகத்தில் அனைத்து பஸ்ஸ்டாண்டுகளிலும் இலவச வைஃபை - அதிமுக தேர்தல் அறிக்கை!!
கழிவறை உள்ளே போக முடியல, எங்கு பார்த்தாலும் எச்சில், குப்பை. இதெல்லாம் அப்பால பார்க்கலாம் முதல்லெ வைஃபை யை கொண்டு வாங்க!!!
கடைசி நேரத்தில் அதிமுக தேர்தல் அறிக்கை நெத்தியடி. மக்களுக்கு பயன்படும் அறிக்கைகள். செயல்படுத்தினால் சந்தோஷம்தான்.
மாதம் 100 யூனிட் மின்சாரம் இலவசம் - அதிமுக தேர்தல் அறிக்கை!
தேர்தல் முடிந்த பிறகு கரண்ட் இருக்குமா என்றே தெரியவில்லை.
நாளொன்றுக்கு 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தருவேன்னு சொன்னதையே காணோம். இதுல வீட்டுக்கு ஒருத்தருக்கு வேலையாம். #அதிமுக தேர்தல் அறிக்கை
சட்டசபை நேரடி ஒளிபரப்புக்கே காசு இல்லன்னு சொன்னாங்க. அப்பறம் எந்த காசுல இதெல்லாம் செய்விங்க..?!
#அதிமுக_தேர்தல்_அறிக்கை
அதிமுக தேர்தல் அறிக்கை- விதி 110 அறிவிப்புகளின் மொத்த தொகுப்பு!
என்ன வித்தியாசம்? அது சட்டமன்றம்; இது மக்கள் மன்றம்.
100 யூனிட் மின்சாரம் இலவசம் - அதிமுக தேர்தல் அறிக்கை
# காசு கட்டியே இங்க கரண்ட காணோம். இதுல ப்ரீயா தர்றாங்களாம் :P
குடும்பத்தில் ஒருவருக்கு "வேலை" வழங்கப்படும்: அதிமுக தேர்தல் அறிக்கை
#மழை வெள்ளம் வந்தா இறங்கி "ஸ்டிக்கர்" ஒட்டனும்
குழந்தைகளை தூங்கவைக்க 'அம்மா' கதை சொல்லுவாங்களே அது போல்தான் இதுவும். #அதிமுக தேர்தல் அறிக்கை
அதிமுக தேர்தல் அறிக்கை; தமிழக ஆறுகளை இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். இணைக்கும்போது எடுத்த படம்...
ரேசன் கார்டுக்கு செல்போன் தர்றது இருக்கட்டும். புது ரேசன் கார்டு எப்ப தருவீங்க!?
ஜெயலலிதா அஸ்திரம், 100 யூனிட் இலவச மின்சாரம்..
ஏற்கனவே உள்ளபடி முதல் 100 யூனிட்டிற்கு 100 ரூபாய்தான்.. 78 லட்சம் பயன்பாட்டாளர்களின் வாக்குகளை குறி வைத்து நன்றாகவே வலை வீசியிருக்கிறார். மானியத்தையும் சேர்த்து இதற்காக அரசு செலவிட வேண்டிய தொகை ஆண்டுக்கு 1950 கோடி ரூபாய்.
வெளிப்படையாக சொன்னால் மாதம் வெறும் 50 ரூபாய் இலவசம். ஆனால் வீட்டுக்கு கரண்ட்டெல்லாம் ஃபிரியாமே என பேச ஆரம்பித்து வைத்துவிட்டார்..
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT