Published : 05 May 2016 11:14 AM
Last Updated : 05 May 2016 11:14 AM
‘வெற்றிவிழா’ படத்தை நாலு, அஞ்சு முறை பார்த்திருக் கேன். ஆனா, இது வரைக்கும் டைட்டிலை பார்த்ததே இல்லை. அதுல என் பேரு இருக்கா, இல்லையான்னு இப்போ வரைக்கும் தெரியாது.
அந்த சின்ன வயசுலேயே ‘வெற்றி விழா’ படம் எனக்கு நிறைய அனுபவம் கொடுத்துச்சு. அப்பா, நான், அண்ணன் ராஜு மூணு பேரும் சேர்ந்து வேலை பார்த்த படம். நிறைய டான்ஸ், எங்கே யும் எதையும் திணிக்காம பாட்டுக்கு என்ன தேவையோ, அதை சரியா கொடுத் திருப்போம். விழுந்து விழுந்து நான் படத்துல ரெண்டு பாட்டுக்கு வேலை பார்த்தாலும், எனக்கு என்னவோ அந்தப் படத்துல ‘மாருகோ மாருகோ மாருகயி’ தான் பிடிச்சப் பாட்டு. அப்பா கோவா வுக்கு போய் நடனம் அமைச்ச பாட்டு அது. ஆடியோ, லொக்கேஷன், எளிமை, கேமரா, நடனம்னு பார்க்கவே சூப்பரா இருக்கும். நாம இன்னும் நிறையப் பண்ணணும் போலிருக்கேன்னு நினைக்க வெச்சப் பாட்டு அது.
அந்த டைம்ல ரஜினி சார் நடித்த ‘மாப்பிள்ளை’ படத்துக்கு அப்பாதான் மாஸ்டர். அதுலேயும் நான் வேலை பார்த்தேன். ‘மாப்பிள்ளை’ தமிழ்ல வர்ற துக்கு முன்னாடியே தெலுங்குல ‘அத் தைக்கு யமுடு அம்மாயிக்கி மொகுடு’ங் கிற பேர்ல ரிலீஸாச்சு. தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி சார் ஹீரோ. அதோட ரீமேக்தான் இங்கே ‘மாப்பிள்ளை’.
அந்தப் படத்துல ‘மெருபுலா… லா… லா…’னு ஒரு பாட்டு அப்பா பண்ணார். சிரஞ்சீவி சாரை வெச்சி, நம்ம ராஜாஜி ஹால்ல மூணு, நாலு நாளுங்க நைட் ஷூட்டிங் நடந்தது. அப்போ பாஸ்ட் டான்ஸ், பிரேக் டான்ஸ் எல்லாம் தெலுங் குல அல்ரெடி பிரபலமாகிட்டு இருந்த நேரம். நான்தான் அந்தப் பாட்டுக்கு அசிஸ்டென்ட். ‘மத்தவங்க பண் ணும்போது வேற மாதிரி இருக்கு. அதே மூவ்மெண்ட் இந்தப் பையன் பண் ணும்போது அது வேற மாதிரி இருக்கே’’ன்னு சிரஞ்சீவி சார் கவ னிச்சிருக்கார். ஷாட் ரெடியாகிறதுக்கு முன்னாடியே ‘‘பிரபு அடுத்து என்ன ஸ்டெப்?’’ன்னு கேட்டு அந்த மூவ் மென்ட்ஸ் சரியா வருதான்னும் ஆடிப் பார்த்துப்பார். அந்த டைம்ல தயாரிப் பாளர், டைரக்டர்ஸுன்னு அவரை பார்க்க நிறைய பேர் வருவாங்க. அப்படி வர்ற வங்ககிட்ட பேசிட்டிருந்தாலும் அவரோட கவனம் எல்லாம், ‘இவன் என்ன பண்ணப் போறான்!’ன்னு என் மேலேயே இருக்கும். அவரை பார்க்க வந்தவங்களும் நாங்க ஆடுறதை ஜாலியா பார்த்து ரசிச்சிட்டிருப் பாங்க. டான்ஸுன்னா சிரஞ்சீவி சாருக்கு ரொம்பப் பிடிக்கும். அவர் அப்படியே தன்னை ஒப்படைச்சிடுவார். உழைச்சா எவ்வளவு உயரத்துக்கு வேணும்னாலும் போகலாம்கிறதுக்கு சிரஞ்சீவி சார் ஓர் உதாரணம்.
சிரஞ்சீவி சாருக்கு என்னோட டைமிங் ரொம்பவும் பிடிக்கும். ‘‘இவன் மட்டும் வேற மாதிரி டைமிங் பண்றான்’’னு சொல் லிட்டே இருப்பார். அந்த டைம்ல என்னை விட சூப்பரா ஆடுற டான்ஸர்ஸும் இருந் தாங்க. ‘‘பிரபு… நீ உன்னை மாதிரியே பண்ணு. உன்னோட டைமிங், உன்னோட ஸ்டைல் ரொம்ப புதுசா இருக்கு. அதையே நான் ஃபாலோ பண்றேன்’’ன்னு என்னை எங்கரேஜ் பண்ணினார். அவ் வளவு பெரிய ஆளு, இப்படி சொன் னப்போ அந்த சின்ன வயசுல மனசுக்கு எப்படி இருந்திருக்கும்னு நினைச்சுப் பாருங்க. நைட் ஷூட் நடக்கும். 8 மணி நேரம், 12 மணி நேரம்னு ஆகும். எவ் வளவு நேரம் ஆடினாலும் சோர்வே ஆக மாட்டார். இந்தப் படம் ரிலீஸாகி பாட்டு பெரிய அளவுல ஹிட். என்னோட தெலுங்கு சினிமா கேரியருக்கு இந்தப் பாட்டு ஒரு விசிட்டிங் கார்டுன்னே சொல்ல லாம். அப்போ இருந்துதான் சிரஞ்சீவி சார் படம் பண்ண ஆரம்பிச்சேன். இப்போ கூட என்னை அவருக்கு ரொம்பப் பிடிக்கும். எனக்கும் அவர் மேல அப்படி ஒரு மரியாதை இருக்கு.
நாலு வருஷத்துக்கு முன்னாடி ஹைதராபாத்தில் விருது வழங்குற விழா நடந்துச்சு. மிகப்பெரிய ஈவண்ட் அது. சிரஞ்சீவி சார்தான் சிறப்பு விருந்தினர். அந்த நிகழ்ச்சியில எனக்கும் விருது கொடுத்தாங்க. மேடையில் தொகுப்பாளர் என்னோட பேரைச் சொல்லி கூப்பிடும்போது நான் அங்கே இல்லை. டிராஃபிக்ல மாட்டிக்கிட்டு தாமதமா நிகழ்ச்சிக்கு போய்ட்டிருக்கேன். ரெண்டாவது தடவையும் என்னை கூப்பிடுறாங்க. மூணாவது தடவையும் கூப்பிடுறாங்க. நான் வரலை. ஆனா, ஸ்டேடியமே அதிர்ற அளவுக்கு கரகோஷம் மட்டும் வந்திருக்கு. சிரஞ்சீவி சார் ஸ்டேஜ்ல ஏறி என்னோட விருதை வாங்கிக்கியிருக்கார். அப்போ மைக்ல ‘‘பிரபு நம்ம பையன் மாதிரி. எனக்கு ரொம்பப் பிடிச்ச ஆளு. அவனுக்கு பதிலா அந்த விருதை நான் வாங்கிக்கிறதுல, ரொம்ப சந்தோஷப்படுறேன். அவன் வந்ததும் அவன்கிட்ட இதைக் கொடுத்துடுறேன்!’’ன்னு சொல்லியிருக் கார். அப்புறம்தான் நான் போய் சேர்ந் தேன். ‘இந்த விருதை உங்களுக்காக சிரஞ்சீவி சார் வாங்கிக்கிட்டார்’னு சொன்னாங்க. அங்கே வந்த என்னை சிரஞ்சீவி சார் பார்த்துட்டு, திரும்பவும் ஸ்டேஜுக்கு வந்து, என்னையும் ஏத்தி அவர் கையால அந்த விருதை எனக்கு கொடுத்தார். ஆச்சர்யமாகிட்டேன். ரொம்ப பெருமையா இருந்துச்சு. என்மேல எவ்வளவு அன்பு இருந்தா அப்படி பண்ணியிருப்பார்னு புரிஞ்சுது. இப்படி இன்னும் நிறைய இருக்கு. சிரஞ்சீவி சார் பத்தி சொல்ல. போகப் போகச் சொல்றேன்.
‘மாப்பிள்ளை’ படத்துல வர்ற ‘என்னோட ராசி நல்ல ராசி’ பாட்டை முடிச்சுட்டு ‘உனை தான் நித்தம்’ பாட்டோட வேலைகளை ஆரம்பித்தோம். அந்தப் பாட்டுக்கு ஜெயில் மாதிரி ஒரு செட் போட்டு ஷூட்டிங் நடந்துச்சு. ரஜினி சாரிடம் அந்தப் பாட்டுக்கு இப்படி ஆடணும்னு ஆடிக் காட்டினேன்.
என்னோட ஸ்டெப்பை எல்லாம் ரஜினி சார் பார்த்துட்டு, ‘‘நல்லா இருக்கே.. நல்லா இருக்கே. அமலா இதெல்லாம் நல்லா ஆடுவாங்க’’ன்னு சொன்னார். ரஜினி சார்கிட்ட எங்க அப்பா ‘‘இது உங்களுக்குத்தான். நீங்க ஆடுங்க’’’ன்னு சொன்னார். அதுக்கு ரஜினி சார், ‘‘என்ன மாஸ்டர், விளையாடறீங்களா? இதெல்லாம் என்னால முடியாது”ன்னு சொன்னார். அப்புறம் என்ன நடந்தது?
- இன்னும் சொல்வேன்…
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT