Published : 09 May 2016 05:41 PM
Last Updated : 09 May 2016 05:41 PM

நெட்டிசன் நோட்ஸ்: பணத்துக்கு ஓட்டு... தனக்குத் தானே வைக்காதீர் வேட்டு!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி நெருங்கி வருகிறது. தேர்தல் ஆணையம், தமிழ்நாட்டில் 100 சதவீத வாக்குப்பதிவு என்ற இலக்கோடு, ஓட்டுக்குப் பணம் பெற வேண்டாம் என்று தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

'ஓட்டுக்குப் பணம்' என்பதை இணைய ஆர்வலர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதன் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

>தமிழன்பன்:

வாக்கு செலுத்த பணம் பெறுவது தவிட்டிற்கு தங்கத்தை விற்பதற்கு ஒப்பாகும் - அண்ணா

>Just Fun :

எவருக்கு வேண்டுமானானும் வாக்களிக்கலாம், கவருக்கு வாக்களிக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கிறேன் : சகாயம் IAS

>சி.பி.செந்தில்குமார்:

ஓட்டுக்கு பணம் வாங்கமாட்டோம் என்று ஒரு கோடி பேர் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் நாளை நடக்கிறது #செக், டிடி வாங்கிட்டா?

>ஆல்தோட்டபூபதி:

இலவசம் என்பது, நம்மகிட்ட கொஞ்சம் பணம் வாங்கி, நம்ம பேருல கடன் வாங்கி, மொத்தமா 100 ரூவா சேர்த்து நமக்கு 10 ரூபாய்க்கு சோறு வாங்கி தர்றது

>ஜானகிராமன்:

உன் பணம் எனக்கு வேண்டாம். பணம் வாங்காமல் ஓட்டுப் போடப் போகிறேன். வாக்களிப்பது எனது கடமை, உரிமை. #தமிழகதேர்தல்களம்

>Ram:

காசு வாங்காம ஓட்டு போடுற அந்த மனசு இருக்கே அதுதான் கடவுள்.

>கபார்கான் அறந்தாங்கி:

வாக்காளரிடம் பணம் வாங்காதீர்கள் என கண்டிக்கும் தேர்தல் ஆணையம், எந்த வேட்பாளரும் பணம் கொடுக்க மாட்டார்கள் என்பதை உறுதிப்படுத்துமா???

>ஹேராம்:>

பேசிக்கலி நான் ஒரு தமிழன்ங்க. காசு வாங்கிட்டு ஓட்டு போடுறதெல்லாம் சர்வசாதாரணம்'ங்க

>சிந்தனைவாதி:

பணம் வாங்கிக் கொண்டு வாக்களித்தால் அரசியல்வாதிகளிடம் நியாயம் கேட்க முடியாது

>தன்மான தமிழன்டா:

இலவசம் தருபவர்களுக்கு...

இலவசமாக குடுங்கள் "தோல்வி"யை...

>Pandiyan:

வோட்டு போடறவன் மனுசன், பணம் வாங்காம வோட்டு போடறவன் பெரிய மனுசன்.

>Jothimani:

இந்தத் தேர்தலில் இறங்கும் தவறான வழியில் சம்பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கோடிகள் பணம், தமிழகத்தின் எதிர்காலத்தை அழிக்கவல்லது என்பது நிச்சயம்.

>S.K.Soundhararajan:

இலவச பொருட்கள் வாங்க ஆசைப்படும் மானிடருக்கு, இலவசமாக ஓட்டு போட மனம் இல்லையா.? #மே16

>கே.கே.புரூஸ்லீ:

பணத்துக்கு ஓட்டு.

உங்களுக்கு நீங்களே வச்சிக்காதிங்க வேட்டு.

>ரம்யா:

ஒரு சொட்டு மருந்தால் போலியோவை விரட்டினோம்.

ஒரு சொட்டு மையால் போலிகளை விரட்டுவோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x