Published : 11 May 2016 01:13 PM
Last Updated : 11 May 2016 01:13 PM
'ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம்' என்று ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்களை உறுதிமொழி ஏற்க வைத்திருப்பதன்மூலம் ஆணையத்தின் முயற்சியில் வெற்றியடைந்துள்ளது என்று சொல்லலாம். எல்லோரும் வாக்களிக்கவேண்டும் என்பது எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் ஓட்டுக்கு பணம் வாங்கக் கூடாது என்பதும் அதிமுக்கியமான ஒன்றாகும்.
இந்நோக்கம் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும். நாளுக்குநாள் தேர்தல் நெருங்க நெருங்க இணையதளங்களில் அதிகம் உலவிவரும் விழிப்புணர்வு குறும்படங்களைப் பார்த்தாலே இந்த எதிர்ப்பார்ப்புகள் எவ்வளவு தூய்மையானது என்பதை தெரிந்துகொள்ள முடிகிறது.
அவ்விதமாகவே, ''ஓட்டுக்கு பணம் வாங்கத்தான் வேண்டுமா?'' என்பதை பொட்டில் அடித்தாற்போல் நம்மை சிந்திக்க வைக்கிறது 'திங்க் அண்ட் இங்க்' எனும் இந்தப் படைப்பு.
இது சின்னஞ்சிறு படைப்புதான் என்றாலும் அதன் முடிவு சொல்லும் சேதி-யில் அடங்கியிருக்கிறது நம் அரசியல் நிலை.
நவீன்குமாரின் தெள்ளிய ஒளிப்பதிவில் கஸ்தூரி பாட்டி மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். அதிமுக, திமுக விளம்பரங்களை முன்வைத்து இணையத்தில் களேபரம் நடந்த நிலையில், கஸ்தூரி பாட்டியின் இந்த அவதாரம் மிரட்டலானது.
நட்டு தேவ் இயக்கியுள்ள இப்படம் 100 சதவீதம் நேர்மையான வாக்குப்பதிவை நோக்கி நம்மை அழைத்துச் செல்கிறது. நீங்களும் பாருங்கள்... நண்பர்களையும் பார்க்கச் சொல்லுங்கள்..
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT