Last Updated : 05 May, 2016 09:40 AM

 

Published : 05 May 2016 09:40 AM
Last Updated : 05 May 2016 09:40 AM

‘கணிப்புக் காய்ச்சலுக்கு என்ன மருந்து டாக்டர்?’

பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் என பல விதமான காய்ச்சல் கள் பரவிய தமிழகத்தில் தற்போது கணிப்புக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் பாதிக்கப் படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இந்த காய்ச்சலின் தீவிரத்தை தடுப்பது குறித்து டாக்டர் ‘ஆல் இன் ஆல்’ அழகுராஜா எம்.பி.பி.எஸ். நமக்கு அளித்த சிறப்புப் பேட்டி:

இந்த நோய் எதனால வருது டாக்டர்?

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா...

நோய்க்கான அறிகுறிகள் என்ன சார்?

குட் கொஸ்டின்,

பாயின்ட் நம்பர் ஒன்: அதிமுக ஜெயிக்கும்னு செய்திய பாத்தா மத்த கட்சிக்காரங்களுக்கு திடீர் திடீர்னு கோவம் வரும். கை, கால் நடுக்கம் ஏற்படும். பிளட் பிரஷர் அதிகரிக்கும். தூக்கம் வராது. வயிற்றுப்போக்கு ஏற்படவும் வாய்ப்பு உண்டு. பணம் வாங்கிட்டான், ஜால்ரா அடிக்கிறான்னு அடிக்கடி புலம்பிக்கிட்டே இருப்பாங்க.

பாயின்ட் நம்பர் டூ: திமுக ஜெயிக்கும்னு செய்திய பாத்தா அந்த கூட்டணிய தவிர மத்த கட்சிக்காரங்களுக்கு இதே அறிகுறி இருக்கும்.

பாயின்ட் நம்பர் த்ரீ: மக்கள் நலக் கூட்டணி, பாமக, பாஜக, நாம் தமிழர் கட்சி இதுல ஏதாவது ஒண்ணு ஆட்சிய பிடிக்கும்னு செய்திய பாத்தா பாகுபாடே இல்லாம எல்லா கட்சிக்காரங்களும் விழுந்து விழுந்து சிரிப்பாங்க, சிரிப்புன்னா உங்க வீட்டு சிரிப்பு எங்க வீட்டு சிரிப்பு இல்ல. அடக்க முடியாம தொடர்ந்து சிரிச்சிக்கிட்டே இருப்பாங்க.

நோயை தடுப்பது எப்படி டாக்டர்?

அதெல்லாம் ரொம்ப கஷ்டம். நோய பரப்பி விட்டா பரவிக்கிட்டேத்தான் இருக்கும். பரப்புரவங்கள தடுத்தா மட்டும்தான் நோய தடுக்குறது சாத்தியமாகும்.

கணிப்புக் காய்ச்சலை குணப் படுத்துவது எப்படி?

நோய் பரவிட்டதால மெது வாத்தான் குணமாகும். மே 19-ம் தேதி மொத்தமா சரியாகிடும். ‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை’ என்ற பாட்ட கேட்டா பாதிப்பு குறையும்.

வருமுன் தடுக்க முடியுமா டாக்டர்?

அதெல்லாம் நம்ம கையில ஒண்ணுமே இல்ல. எல்லாம் மேல இருக்கிறவன் (எலெக்சன் கமிஷன்) கையிலதான் இருக்கு.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உங் கள் ஆலோசனை என்ன?

முதல் கேள்வியோட பதில் தான் இதுக்கும். கூடவே, நான் என்ன சொல்றேன்னா... டிராபிக் ஜாம்னு வந்துட்டா, காது கிழியுற மாதிரி ஆரன் அடிக்கத்தான் செய்வாங்க. ஏன் அடிக்கிறீங்கனு எல்லாரையும் கேட்டுக்கிட்டு இருக்க முடியாது. அந்த மாதிரி, தேர்தல்னு வந்துட்டா, கருத்துக் கணிப்பு நடத்ததான் செய்வாங்க. அதை அனுபவிக்க பழகணுமே தவிர, ஆராயக் கூடாது. வாட்ஸ் அப், பேஸ் புக், ட்விட்டரை எல்லாம், ரிசல்ட் வர்ற அன்னிக்கு ராத்திரி வரைக்கும் மூடி வச்சிருந்தா, உங்களை இந்த நோய் தாக்காம காப்பாத்திக்கலாம்.

கருத்துக் கணிப்பை நம்பலாமா?

அரசியல்வாதிங்களை ஜனங்க இன்னும் நம்பலையா..? அப்படி பாருங்களேன் இதையும்...

கடைசி கேள்வி சார், எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும்?

அடேய்... தூக்கி அடிச்சிருவேன் பாத்துக்க...மரியாதையா ஓடிப்போயிரு, இல்லன்னா கீழ்ப்பாக்கத்துல அட்மிட் பண்ணிருவேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x