Published : 21 Apr 2016 01:11 PM
Last Updated : 21 Apr 2016 01:11 PM

நெட்டிசன் நோட்ஸ்: வசந்தி தேவியும் ஆர்.கே.நகர் தொகுதியும்

ஆர்.கே.நகரில் தேமுதிக மக்கள் நலக் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மோதிரம் சின்னத்தில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை முன்னாள் துணைவேந்தர் வசந்தி தேவி போட்டியிடுவார் என அக்கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார். இதுகுறித்து நெட்டிசன்கள் தெரிவிக்கும் கருத்துகளின் தொகுப்பு...

>சி.பி.செந்தில்குமார்:

ஜெயலலிதாவை எதிர்த்து ஆர்.கே.நகரில் களமிறங்கும் முனைவர் வசந்திதேவி. வசதி தேவி Vs வசந்தி தேவி, ஜெயிக்கப்போவது யாரு?

>maalan:

"யாரையும் வீழ்த்த அல்ல, மாற்றத்திற்காக" என்ற கேடயத்தோடு களமிறக்கப்பட்டிருக்கிறார் வசந்தி தேவி. அறிவாற்றல்.

>SKP Karuna ‏@skpkaruna விடுதலைச் சிறுத்தைகளின் வேட்பாளர் டாக்டர்.வசந்தி தேவி! திருமாவை ஆரத்தழுவி முத்தமிட எனக்கு 100 காரணங்கள் உண்டு. இது 101.

>என் தாகம்:

வசந்தி தேவி-மனோன் மணியம் பல்கலைக்கழக முன்னாள் தலைவர்.

ஜெயலலிதா-மாண்புமிகு அம்மா புரட்சி தங்க தாரகை.

#தகுதி

>Leena Manimekalai:

ஆர்.கே. நகர் தொகுதியில் முன்னாள் துணைவேந்தர், கல்வியாளர் வசந்தி தேவியை வேட்பாளராக நிறுத்தி தமிழக தேர்தல் களத்தில் அட்டகாசமான முன்மாதிரியை நிகழ்த்தியிருக்கிறது விடுதலை சிறுத்தைகள் கட்சி.

>Nelson Xavier:

கல்வியாளர் வசந்திதேவி மாதிரியான நபர்களை வேட்பாளராக விடுதலைச் சிறுத்தைகள் அறிவித்திருப்பது தமிழக வரலாற்றில் மிக முக்கிய நகர்வு. எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளாராக அவர் அறிவிக்கப்பட்டால் மகிழ்ச்சி . நான் தமிழ்நாட்டில் இருப்பதால் அப்படிஎல்லாம் நடக்காது என்பதை தெரிந்துவைத்திருப்பது கூடுதல் மகிழ்ச்சி !

>Tahir Abu:

ஆர்.கே . நகர் சட்ட மன்ற தொகுதி வேட்பாளராக விடுதலை சிறுத்தைகளின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள வசந்தி தேவியை இன்ன பிற கட்சிகளின் ஆதரவாளர்களும் வாழ்த்தி வரவேற்கிறார்களே !!

>Ayyan Kalai:

கல்வியாளர் வசந்தி தேவி, ஏழை, பணக்கார குழந்தைகளுக்கு இடையே இருக்கும் சமமற்ற கல்வி முறை குறித்து எழுதிய ஒரு கட்டுரையை படித்து, அதன் பாதிப்பில் கலைஞரின் மனதில் உருவான திட்டமே சமச்சீர் கல்வி திட்டம்.

>Kombai S Anwar:

ஆர்.கே.நகர், தொகுதியில் மதிப்பிற்குரிய முன்னாள் துணை வேந்தர் 'வசந்தி தேவி'யை வேட்பாளராக விடுதலை சிறுத்தைகள் அறிவித்திருக்கிறது. மக்கள் நலக் கூட்டணி குறித்து எனக்கு கடுமையான மாற்றுக் கருத்து இருந்தாலும் திருமாவின் இந்த அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. வரவேற்கிறேன்.

>Mathava Raj:

ஆர்.கே.நகர் வேட்பாளராக பேராசிரியை வசந்தி தேவியை விடுதலை சிறுத்தைகள் சார்பில் வேட்பாளராக நிறுத்தியிருப்பது இந்த மொத்த தமிழக தேர்தலின் குறிப்பிடத் தகுந்த, கவனத்துக்குரிய ஒரு விஷயம். இந்த தேர்தலின் மையப் புள்ளியென்றே கருத வைக்கிறது. இந்தப் புள்ளியிலிருந்து தமிழகத் தேர்தலை புரிந்து கொள்ள தொல்.திருமாவளவன் மக்களுக்கு அழைப்பு விடுத்திருப்பதாகவே தோன்றுகிறது. கிரேட்!

#சும்மா அதிருதுல்ல....

>Marx Anthonisamy:

ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயாவை எதிர்த்து ம.ந.கூ சார்பாக டாக்டர் வசந்தி தேவி நிறுத்தப்பட்டுள்ளார்.

சக்கரைச் செட்டியாரின் பேத்தி, முன்னாள் துணை வேந்தர், முன்னாள் பெண்கள் ஆணையத் தலைவர், கல்லூரி ஆசிரியர் சங்கப் போராளி, அனைவராலும் மதிக்கப்படும் ஒரு அறிஞர் வசந்தி தேவியை ஊழல் பெருச்சாளி ஜெயாவுக்கு எதிராகப் பொது வேட்பாளராக அறிவிக்க திமுக முன் வர வேண்டும்.

ஜெயாவைத் தோற்கடிப்பதில் உண்மையிலேயே திமுகவுக்கு அக்கறை உள்ளதென்றால் ஆர்.கே.நகருக்கு நிறுத்தப்பட்டுள்ள திமுக வேட்பாளரை அவர்கள் திரும்பப் பெறுவதோடு வசந்தி தேவிக்கு ஆதரவளிப்பதாக அறிவிக்க வேண்டும்.

>Saravanan K:

ஆர்கே நகரில் கல்வியாளர் வசந்தி தேவி விடுதலை சிறுத்தைகள் சார்பாக நிற்கிறார்... இவரெல்லாம் சட்டசபைக்கு போவது கல்வி வளர்ச்சிக்கு நல்லது. தேர்வு செய்த சிறுத்தைகளுக்கு பாராட்டுகள்.

>Velumani Thuyavan:

தெறிக்கவிடலாமா? ‪#‎வசந்தி தேவி‬ யை

>UKG:

பாவம் இந்த வசந்தி தேவி அம்மாவை போய் சாக்கடையில் தள்ளி விடுறாங்க - அரசியல் ஒரு சாக்கடை.

>piraikannan:

வசந்தி தேவி போன்ற சிறந்த கல்வியாளரை வெற்றி பெற செய்யும் எண்ணம் உண்மையில் இருந்திருந்தால் , 234-ல் RK நகர் மட்டுமா கண்ணில் தெரிந்திருக்கும்!

>Guru NP ‏@GuruRevdas

ஆசிரியர் தினம் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளில் கொண்டாடுகிறோம். அந்த பெயரில் உள்ள ஆர்கே நகர் தொகுதியில் கல்வியாளர் வசந்திதேவி ஜெயித்தால் சிறப்பு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x