Published : 05 Apr 2016 06:20 PM
Last Updated : 05 Apr 2016 06:20 PM

நெட்டிசன் நோட்ஸ்: பாமாயிலில் விழும் பழங்களும் கெத்து விடாத கேப்டனும்

மக்கள் நலக் கூட்டணியில் இருந்து தேமுதிக விலக வேண்டும் என்று சந்திரகுமார் தனது ஆதரவாளர்களுடன் போர்க்கொடி உயர்த்த, உடனடியாக கருத்துகளும் கலாய்ப்புகளும் சமூக வலைதளங்களில் கொட்டப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, தேமுதிக நிர்வாகிகள் 10 பேரையும் விஜயகாந்த் அதிரடியாக நீக்கியதும் வேறு வகையிலான கருத்துகள் பகிரப்பட்டன.

முதலில் சந்திரகுமார் அணி போர்க்கொடி உயர்த்திய பிறகு...

>குட்டி பையன்:

சந்திரகுமார் தலைமையில் அணி திரண்ட எம்.எல்.ஏக்கள், 10 ம.செக்கள்: உடைந்தது தேமுதிக

இங்க இருந்த தேமுதிகவ காணங்க...

>☆ѕєℓναи:

விஜயகாந்த் ரசிகனுக்கு / தேமுதிக விசுவாசத் தொண்டனுக்கு, இந்த சந்திரக்குமார் யாரென்றே தெரியாது.

>குருபிரசாத் தண்டபாணி:

கூட்டணிக்கு வந்தா தொகுதியைப் பிரிப்போம்..., வரலன்னா கட்சியவே பிரிப்போம்...

‪#‎தேமுதிக‬ பிளவு...

>சி.பி.செந்தில்குமார்:

சந்திரகுமார் நேர்மையானவராக இருந்தால் கூட்டணி அறிவிப்பு வந்த உடனே தன் அதிருப்தியை தெரிவித்திருக்கலாம்.

>Arul Ezhilan:

பழங்கள் நழுவி பாமாயிலில் விழுந்து விட்டது.

*

திமுகவை வீழ்த்த வேண்டும் என்பது விஜயகாந்த், வைகோ, ஆகியோரின் விருப்பமாக இருக்கலாம். அப்படி விரும்புவது அவர்களின் தனி உரிமை. ஆனால் தன் கட்சி பிரமுகர்களுக்கும், கட்சித் தொண்டர்களுக்கும் அது போன்ற விருப்பம் இருக்க வேண்டும் என்று நினைப்பதில் இருந்து துவங்குகிறது வீழ்ச்சி.

>வெ.பூபதி:

என்ன சோனமுத்தா...இப்படி கொத்துக் கொத்தா போகுது?!

>Karthik Duraisamy:

வாங்க கேப்டன், நாமெல்லாம் சேர்ந்து பால்ல விழுவோம் - தேமுதிக சந்திரகுமார்

>பாரூக் முதுவை:

வெளியே இருந்து எதை வேண்டுமானாலும் பேசலாம், சொந்த காசில் கட்சிக்காக உழைத்தவருக்கே தெரியும். #சந்திரகுமார் முடிவு சரியானதே

>Arun Kumar:

யார் கூட்டணி அமைத்தாலும் அமைக்காவிட்டாலும் திமுகதான் ஆட்சியை பிடிக்கும் . நாங்கள் மக்களை நேரில் சந்திக்கிறோம். மக்கள் திமுகவைதான் விரும்புகிறார்கள். - தேமுதிக கொ.ப.செ. சந்திரகுமார்.

#தலைவர் டா, ராஜ தந்திரம் டா, பழம் டா, பால் டா..

>சதீஷ் துளசிங்கம்:

இத்தனை நெருக்கடிகள் வருகிறது என்றால், அது தேமுதிக - ம.ந.கூ. அணியின் வெற்றியே...

>SANKAR ANANTH:

வைகோ: தேமுதிக எங்ககூட சேர்ந்தப்ப கூட கல்லு மாதிரி இருந்த கூட்டணி, அம்மா வேட்பாளர் அறிவிச்சதும் சும்மா நொறுங்கிருச்சு.

*

தேமுதிக உடைகிறது - செய்தி.

கலைஞர் நவ்: டேய் பழம் பழுக்கலைனாலும், இந்த ஆல் இன் ஆல் அழகு ராஜா பொடி போட்டு பழுக்க வைப்பான்டா

>Gokila ராங்கி Honey:

இந்த வேலைகளால் உடையறது தேமுதிக கட்சி மட்டுமில்லை, மக்கள் மத்தியில் திமுகவுக்கு இருக்கும் மதிப்பும் தான் ;-)

>மேடம் ஷீபா:

தேமுதிக எம்எல்ஏக்கள அம்மா விலைக்கு வாங்குனா ராஜதந்திரம். கேப்டன் கூட்டணி சரியா அமைக்கலன்னு கட்சிக்காரங்க வெளியேறுனா கலைஞர் சில்றத்தனமாம்

>Mr.கிறுக்கு பய:

தேமுதிக என்ற கட்சி பிற உறுப்பினர்களை நம்பி கிடையாது என்பது கூட தெரியல. இன்னும் எத்தன பேரு வெளிய போனாலும் ஓட்டு சிதறாது...!..!

>кαятнιк:

விஜயகாந்த் புகழ் பாடிய சந்திரகுமார் என்ற ஒரு மனிதன், தன் வேதனையை வெளிப்படுத்துகிறார் என்றால் அதை விஜயகாந்த் பரிசீலனை செய்யவேண்டும்.

>தமிழ்வாழ்:

விஜயகாந்த், தன் நிலையை அறிவித்த பிறகு இதுபோல நெருக்கடி கொடுக்கும் தொண்டன், ஆட்சியில் எடுக்கும் முடிவிலும் தலையிட மாட்டான்னு என்ன நிச்சயம்?

>பாலகிருஷ்ணன்:

Other MLA's : இப்ப நாம திமுகவா? தேமுதிகவா?

சந்திரகுமார் : திமுகவா ஆக நினைக்கற தேமுதிக..

>டான் டான் டான்:

மார்க் மை வேர்ட்ஸ்... மொத்த பேரையும் தூக்கியடிக்க போறாரு கேப்டன்.

சந்திரகுமார் உள்பட 10 நிர்வாகிகளை விஜயகாந்த் நீக்கிய பிறகு...

>தஞ்சை விவசாயி:

வைகோ டு விஜயகாந்த்

தியாகம் தான் உன்னை உயர்த்தும்.....

>Rowdy:

விஜயகாந்துக்கு கெடு விதித்த சந்திரகுமார் அணி கூண்டடோடு நீக்கம்: விஜயகாந்த் அதிரடி: கேப்டன தொட்டா கரண்டுக்கே ஷாக் அடிக்குமடா

>தமிழ் விஜி மானுஸ்ரீ:

ஒரு நாள் பொட்டுன்னு போட்ட பட்டுன்னு போய்டுவ, ஒருநாள் தட் மொமண்ட் நவ் விஜயகாந்த் சே டு சந்திரகுமார்.

>Ramesh Babu S:

#சந்திரகுமார் உள்ளிட்ட அதிருப்தி நிர்வாகிகளை தேமுதிக-வில் இருந்து நீக்கி #விஜயகாந்த் உத்தரவு..

கெத்த விடாத...#கேப்டன்.. கெத்த விடாத

>mani:

இதனால் DMKக்கு தான் loss அதிகம் ஏற்படும். கூட்டணி ஏற்பட்டால் வெற்றிக்கு பின் என்ன ஏற்படும் என்று விஜயகாந்த் கணித்து சரியாகிவிட்டது.

>RCB ட்விட்டர் ரஜினி:

கலைஞரின் எலிகாப்டர் ஷாட்டின் ரிசல்ட் # சினிமாக்கு வரதுக்கு முன்னாடியே மதுரைல ரஜினி ரசிகர் மன்ற தலைவர்டா எங்க கேப்டன்

>Elumalai Venaktesan:

தேமுதிக பிளவுன்னு சொல்றாங்க...

தமிழ்நாட்டில் உள்ள தனி மனித கட்சியில் அதுவும் ஒன்று.. தனி மனித கட்சியில் பிளவு என்பதே சாத்தியமில்லை..

விஜயகாந்தை விட்டு எத்தனை நிர்வாகிகள் போனாலும் அவர்கள் தலை எண்ணிக்கை அளவுக்கு வாக்குகள் குறையும்..விஜயகாந்த் உறுதியாக இருந்தால் இதுபோன்ற நிலைகளை சுலபமாக கடக்கமுடியும்..

விஜயகாந்தைவிட்டு பிரிபவர்கள் சலசலப்பை உண்டு பண்ண உதவுவார்கள். பரபரப்பை தவிர அவர்களால் எந்த புண்ணியமும் கிடையாது..

முக்கிய குறிப்பு...தனக்கு பயன்படவில்லை என்றால் டிஸ்போஸ் செய்வதில் மேற்படி இரு எதிர் முகாம்களும் ஒன்றுக் கொன்று சளைத்தவர்கள் அல்ல. சிரித்தபடியே திட்டுவதிலும் அழுதபடியே பாராட்டுவதிலும் கில்லாடிகள்....

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x