Published : 07 Apr 2016 02:26 PM
Last Updated : 07 Apr 2016 02:26 PM
கோவில் மணி அடிக்கும் ஒலி, ட்ரெயின் ஒலிச் சத்தம், மத்தளத்தின் ஓசை, பள்ளியில் அடிக்கும் பெல், பறை அடிக்கும் சப்தம் ஆகிய அனைத்தும் தொடர்ந்து ஒலிக்கின்றன. எங்கேயிருந்து இந்த சத்தங்கள் வருகின்றன? யாராவது பதிவு செய்யப்பட்ட ஒலி நாடாவை ஒலிபரப்புகிறார்களா?
இல்லை, மைக்கேல் என்பவரின் உபகரணங்களில் இருந்துதான் எல்லா ஒலிகளும் மேலெழும்புகின்றன. பரவாயில்லையே எல்லா மாதிரியான ஒலிக்கருவிகளையும் இறக்குமதி செய்து வைத்திருக்கிறாரே என்கிறீர்களா? அதுதான் இல்லை, எதை வைத்து இவற்றை செய்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள ஆசையா? கொஞ்சம் இந்தக் காணொலியைப் பாருங்களேன்.
தண்ணீர் பாட்டில், கேன், பாத்திரங்கள், பிளாஸ்டிக் பொருட்கள், டிவி உள்ளிட்ட சுமார் 150 பொருட்களை தனது ட்ரம்ஸ் இசைக் கருவிகளாக மாற்றியிருக்கிறார் மைக்கேல். இசைக்கருவிகள் வாங்கப் பணம் இல்லாததால், தன் தாயின் தையல் மெஷினில் இசைக்க ஆரம்பித்ததில் தொடங்கியிருக்கிறது மைக்கேலின் இசை வாழ்க்கை.
ஏ.ஆர்.ரஹ்மானின் இசைப் பள்ளியில் சேர்ந்து தன்னை மெருகேற்றிக் கொண்ட மைக்கேல், இப்போது பல மதிப்புமிக்க விருதுகளுக்குச் சொந்தக்காரர். 350-க்கும் மேற்பட்ட மேடைகளிலும் இசைத்திருக்கிறார். சிசிஎல்லில் கலந்துகொண்ட மைக்கேலுக்கு, சிவமணியைப் போல, ஐபிஎல்லில் கலக்கும் ஆசை இருக்கிறது. கின்னஸ் ரெக்கார்டில் இடம்பிடிக்க வேண்டும் என்ற உத்வேகத்திலும் இருக்கிறார் மைக்கேல்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT