Published : 20 Apr 2016 04:28 PM
Last Updated : 20 Apr 2016 04:28 PM
தேர்தல்களில் மிக முக்கிய அம்சமாகவும், மக்களால் கவனிக்கத்தக்கதாகவுமான தேர்தல் அறிக்கைகள் - வாக்குறுதிகள் குறித்து கட்சிகளைப் போலவே நெட்டிசன்களும் அதிகம் பேசத் தொடங்கிவிட்டனர். அது தொடர்பான ஒரு தொகுப்பு...
அனைத்து கட்சியின் பொதுவான தேர்தல் வாக்குறுதி...
தேர்தல் வாக்குறுதிகள் நிச்சயம் நிறைவேற்றப்படும்.
தேர்தல் வாக்குறுதி: குடிசையற்ற தமிழகம் உருவாக்குவோம்..
அப்படி நினைச்சு தான் இந்த அரசியல்வாதிக, தீய வச்சு கொளுத்திர்றாங்க..
2006 திமுக தேர்தல் அறிக்கையில் ஆற்றுப்படுகையிலிருந்து 100 மீட்டர் தொலைவில் நிலங்களுக்கு இலவச மின் இணைப்பு என்ற வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதா?
காதல் என்பது தேர்தல் வாக்குறுதி மாதிரி, அவ்வளவும் இனிக்கும்.
திருமணம் என்பது 5 ஆண்டு ஆட்சி மாதிரி,
பல்ல கடிச்சிகிட்டு இருந்துதான் ஆகணும்!
இதுவே கடைசி தேர்தல் என்று நினைப்பவர்கள் என்ன வாக்குறுதி வேண்டுமானால் கொடுக்கலாம்.. அதில் என்ன பிரச்சனை?
1974ல காங்கிரஸ் கச்சத்தீவ கொடுத்தப்ப அவங்களோட கூட்டணில இருந்திட்டு, இப்ப வந்து மீட்போம்னு தேர்தல் வாக்குறுதி கொடுக்குது. #அதிமுக
என்னதான் சிறப்பான தேர்தல் வாக்குறுதி தந்தாலும், இத்தேர்தலில் நாகரிகமான அரசியல் செய்தாலும், ஜாதிக்கட்சி என்ற பேர் அழியப்போவதில்லை #பாமக
வெகு சாமர்த்தியமாக காற்றில் பறக்கவிடுவார்கள்... தேர்தல் வாக்குறுதி உட்பட.
இலவசம் வேணும்னா டாஸ்மாக் இருக்கணும்;
டாஸ்மாக் மூட வாக்குறுதி கொடுத்தா, இலவசம் இல்லாத தேர்தல் அறிக்கை விடலாம்.
கட்சிகளின் தேர்தல் வாக்குறுதி அறிக்கையினை முன் வைத்து வாதப் பிரதிவாதங்கள் நடக்கின்றன. இன்னுமா இந்தக் கட்சிகளை மக்கள் நம்புகின்றனர்? அல்லது வாக்குறுதிகளில் மக்கள் நலன் சார்ந்ததை மட்டும் தேர்வு செய்யவும் தேர்தலுக்குப் பின் வாக்குறுதி நிறைவேற்றா அரசுகளை நோக்கிக் கேள்வி கேட்கவும், அவர்களை அகற்றவும் எதிர்க்கவும் தயாராக வேண்டுமென்ற அளவுக்குத் தமிழன் சிந்திக்கத் தொடங்கிவிட்டானா? எனில், கேரள அரசியல் நிலைமை(கூட்டாட்சி) கூடிய சீக்கிரமே தமிழகத்திலும் வந்துவிடுமென எதிர்பார்க்கலாமோ!
110 விதி மாதிரி வந்திருக்கு ADMK தேர்தல் வாக்குறுதி.
தேர்தல் அறிக்கை கிடையாது, நிரந்தர வேட்பாளர் கிடையாது, வேட்பாளருக்கு மரியாதை கிடையாது, வாக்குறுதி மட்டும் குடுப்பாங்க!
எல்லா தேர்தலிலும் தவறாமல் இடம் பிடிக்கும் தேர்தல் வாக்குறுதி "கச்சத்தீவை மீட்டெடுப்போம்"
#திமுகதேர்தல்அறிக்கை
*
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு நல்லது செய்வோம் - தேர்தல் வாக்குறுதி!
உங்களுக்கு அதுதான் வேலை, இத வாக்குறுதியா வேற சொல்றீங்களா.
ஊருக்கே சோறு போடுபவன் விவசாயி. ஆனா அரசியல் கட்சிகள் முப்பது கிலோ இலவச அரிசி தர்றதா தேர்தல் வாக்குறுதி கொடுத்திருக்காங்க.
#முரண்
பேய் பட ட்ரெண்டை ஒழிப்போம்ன்னு யாராவது தேர்தல் வாக்குறுதி தந்தா தேவல.
தேர்தல் வாக்குறுதி என்றாலே ஏமாற்றுதான்...
அதில் யார் நம்புற மாதிரி பேசி ஏமாத்துறாங்க என்பதில்தான் போட்டியே...
#போட்டி ஆரம்பம்
காதலிக்கும்போது காதலன் காதலிக்கு தர்ற வாக்குறுதி போலதான்..
இந்த தேர்தலின் போது கட்சிகளால் தரப்படும் தேர்தல் அறிக்கைகளும்.
இலவசங்கள் குடுக்குறதுக்கு முன்னாடிலாம், அடிப்படை பொருட்கள் விலையேற்றமாட்டாம்னு தேர்தல் வாக்குறுதி இருக்கும். இப்ப அவங்களும் சொல்லலை; நம்மளும் கேக்கலை.
தேர்தல் அறிக்கை வாக்குறுதிகளை, 2 ஆண்டுக்குள் ஆரம்பிக்காத ஆளும் கட்சி மீது வழக்கு தொடர ஏதுவாக சட்டம் இருந்தால் நல்லது. பொய் வாக்குறுதி ஒழியும்.
தார்ச்சாலையில் 'கானல் நீர்'. அரசியல்வாதியின் தேர்தல் வாக்குறுதி, ஆட்சி அமைத்த பின் ஏமாற்றம் போலவே!
வாக்குறுதி அள்ளிவீசி வாசலுக்கு வருவாரின்
நோக்கறிந்து வாக்கினைக் கொடு. #தேர்தல்_குறள்
"ஒருத்தன ஏமாத்தணும்னா! மொதல்ல அவன் ஆசைய தூண்டனும்" -அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகள்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT