Published : 09 Apr 2016 05:17 PM
Last Updated : 09 Apr 2016 05:17 PM
தினந்தோறும் தமிழக தேர்தல் களம் சூடுபிடித்து வரும் நிலையில், இன்றைய முக்கிய நிகழ்வாக தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இணைந்துள்ளது. எதிர்பார்த்துக் காத்திருந்த இணையவாசிகள் எதிர்வினைகளைக் கொட்டி வருகின்றனர். அவற்றின் தொகுப்பு.
மக்கள் டூ ம.ந.கூ.: ஏற்கெனவே தேமுதிகவை காலி பண்ணியாச்சு, இப்போ தமாகாவா?
தமாகா மீண்டும் காங்கிரஸில் இணைய வேண்டும் - ஈவிகேஎஸ்.
பாவம் 41 சீட்ட வாங்கி வச்சுகிட்டு, வேட்பாளர் கிடைக்காம அண்ணன் தவிச்சுகிட்டு இருக்கிறார்.
ஊழல் கறை படியாத தமாகாவுக்கு மக்களை சந்திக்க தைரியம் உள்ளது : ஜி.கே.வாசன்.
ஆனால் உங்களுக்கு ஓட்டு போடும் தைரியம் மக்களுக்கு இல்லையே..!
அதிருப்தி தமாகாவினருக்காக காங்கிரஸ் கதவுகள் திறந்தே இருக்கின்றன- இளங்கோவன்
கதவுகளை திறந்து பார்த்த போது...
மூன்றாவது அணி பலமாக இருப்பது அதிமுகவுக்கு நல்லது. தமாகா வென்றால் கூட காங்கிரஸ் அணிக்கு அல்ல, அதிமுகவையே ஆதரிக்கும்.
#ம_ந_கூவில் இணைந்தது #வாசனின் தமாகா!
#காங்கிரஸின் வாக்குகளை #தமாகா பிரிக்கும் என்பதால் அதிர்ச்சியில் #திமுக
காங்கிரஸு கூட கூட்டணி சேர்ந்த திமுகவ திட்டுன கும்பல் எல்லாம், மநகூ கூட கூட்டுல இருக்க தமாகாவுக்கு ஆதரவு தெரிவிச்சிங்..!
அதிமுக கூட்டணியில் தமாகா இணையாததற்கு இரண்டே காரணங்கள்தான் சொல்லப்படுகிறது >.
ஒன்று இரட்டை இலையில் போட்டி.
இரண்டு பீட்டர் அல்போன்சுக்கு நோ சீட்.
பம்பரம், முரசு, மோதிரம் etcன்னு தனித்தனி சின்னத்துக்கு பதிலா, தென்னந்தோப்பு பத்திரத்தையும் உள்ள வச்சு சூட்கேஸ் சின்னதுல நிற்கலாம்.
மநகூ 2 மற்றவர்கள்: எங்கள சமாளிக்கவே முடியலைல?
திமுக-மநகூ இடையே தான் போட்டியே... எதிர்க்கட்சி யாரென்பதில்!
@GKVasanTMC கடைசி நேரத்தில் வேறு வழி இன்றி மநகூ வில் சேர்ந்தது அவரின் மீது உள்ள மரியாதையை குறைக்கிறது.
*
@VIJAYAKAANTHம், @gkvasanம் 4 மாதத்துக்கு முன்பு மநகூ யில் இணைந்து களப்பணி ஆற்றிருந்தால் ஒரு வலுவான அணியாக இருந்திருக்கும்.#ThisTime4MNK
யூ மீன் சிக்ஸ் ஃபேஸ்? #மநகூ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT