Published : 11 Apr 2016 03:20 PM
Last Updated : 11 Apr 2016 03:20 PM
"சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைத்தவுடன் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும்."
தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா தனது முதல் பிரச்சாரக் கூட்டத்தில் அளித்த முதல் முக்கிய வாக்குறுதி இது. சிட்டிசன்கள் மீது அக்கறை கொண்ட இந்த வாக்குறுதியை நெட்டிசன்கள் எப்படிப் பாக்கிறார்கள்?
இந்த தேர்தலின் ஹீரோ "மதுவிலக்கு" ! ஒட்டுமொத்த தாய்மார்களுக்கும் கிடைக்கப்போகிற பெரும் நிம்மதி!
விஜயமல்லையாவே வந்து மதுவிலக்கு கொண்டுவருவேன் என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்ல, ஆளாளுக்கு சொல்லுறாங்க
#மதுவிலக்கு
டார்கெட் வெச்சு மது வித்துட்டு, அதிகம் வித்த கடைக்கு அவார்டு கொடுத்துட்டு, மதுவிலக்கு என் ஆசைனு சொல்வதை நம்பும் மக்கள், அம்மாவின் பலம்!
மதுவிலக்குக்கான போராட்டத்தை ஒடுக்கிய ஜெயலலிதா, என்னை இருமுறை கைது செய்த ஜெயலலிதா, மதுவிலக்கு பற்றி பேசுவது நகைச்சுவை!
படிப்படியாக மதுவிலக்கு கொண்டுவரப்படும் - ஜெயா
#எவன்டா அது மதுவிலக்க கொண்டுபோய் மாடில வெச்சது?
மதுவிலக்கு வேனும்னு சொன்ன இளைஞர்கள் பலர் கட்டாய ஹெல்மெட்டை எதிர்த்தத மட்டும் என்னால ஜீரணிக்க முடில. ஸ்லோ பாய்ஸன் வேணாம், சயனைட்தா வேணும் மொமண்ட்.
இந்த தேர்தலில் முக்கிய ஹீரோவானது - மதுவிலக்கு. ஆனால் ஹீரோயின் போல கிளாமர்க்கு மட்டும் பயன்படுத்தாமல் கிளைமேக்ஸ் வரை சென்றால் சரி..
நெசமாவே மதுவிலக்கு வந்துருச்சுன்னா, குடிக்கிறவங்க நடத்துவாங்க பாருங்க ஒரு போராட்டம்.. அந்த ஆட்டத்தை நாடு தாங்காது.
படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்துவோம் என்கிறாரே ஜெயலலிதா... இது தேசவிரோதம் இல்லையா மேடம்?
டிர்...நாவ் @Thiru_navu
மதுவிலக்கு குறித்த அதிமுகவின் நிலைப்பாடு நம்பகத்தன்மையோடு இருக்கிறது. ஒரேடியாக மூடிவிடுவது என்பது பல எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்!
டாஸ்மாக் கலைக்கப்பட்டு மது முழுமையாக ஒழிக்கப்படும். - செய்தி.
#இவங்களே `பாம்`வைப்பாங்களாம்... இவங்களே எடுப்பாங்களாம்!
மதுவிலக்கு உறுதி!
என்ன?! குடிமக்கள் ஓட்டு வேணுமா வேண்டாமா?!
அவ்வ்!! மதுவிலக்கை படிப்படியாக அமுல் படுத்துவோம்!
மதுவிலக்
மதுவில
மதுவி
மது
ம
அதிமுக ஆட்சிக்கு வந்தால் மதுவை விலக்குவோம் எனில், இப்பொழுது அதிமுக ஆட்சியில் இல்லையா? சட்ட சபையிலேயே முழங்கவில்லையே மதுவிலக்கு பற்றி...
பலமுறை மதுவிலக்கு கொண்டுவருவோம்னு சொன்ன திமுக, முதன்முறையாக மதுவிலக்கு பற்றி பேசிய ஜெயாவை பார்த்து பயப்படுது! ஏனென்றால் ஜெயா சொன்னா செய்வார்.
ஜெயலலிதா மதுவிலக்கை அமல்படுத்துவேன் என கூறியது வரவேற்கதக்கது - சரத்
சாத்தியமில்லன்னு சொன்னாலும் நீ வரவேற்பேன்னு எங்களுக்கு தெரியும் ராசா
ஒரே கையெழுத்தில் எல்லாம் மதுவிலக்கு கொண்டுவர முடியாது!- ஜெயலலிதா.
அப்போ 2003 ல போராடிய அரசு ஊழியர்கள ஒரே கையழுத்துல நீக்குனது யாரு?
71-ல் மதுக்கடைகளை திறந்ததை 74ல் மூடிய கலைஞர்.. - ஜெ பிரச்சாரம்
81-ல் எம்ஜிஆர் திரும்பவும் திறந்ததை மறைத்து விட்டார்.
மக்கள்: அம்மா நீங்க ஆட்சிக்கு வந்தா மதுவிலக்கு வருமா??
அம்மா: வரும்.... ஆனா வராது..
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT