Published : 08 Apr 2016 02:46 PM
Last Updated : 08 Apr 2016 02:46 PM

நெட்டிசன் நோட்ஸ்: அதிமுக பட்டியல் மாற்றமும் ஒருநாள் வேட்பாளரும்!

அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட கையோடு, அதில் அவ்வப்போது மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் குறித்து நெட்டிசன்கள் தெறித்துவரும் கருத்துகளில் சில...

>Ashokkumar:

புதியதலைமுறை, தந்தி, பாலிமர், நியூஸ்7, சத்தியம்: 5 வது முறையாக அதிமுக வேட்பாளர் பட்டியல் மாற்றம்!

ஜெயா டிவி: வேட்பாளர் பட்டியலில் சின்ன திருத்தம்!

>ராஜ்மோகன்:

இந்த உலகில் எதுவுமே நிரந்தரம் இல்லை...

ஆமாம்,

அதிமுக வேட்பாளர் பட்டியல் கூட!

>வெட்டி ஆனாலும் பிஸி:

அதிமுக வேட்பாளர் பட்டியலில் 5வது முறையாக மாற்றம் செய்து ஜெயலலிதா அறிவிப்பு!

#நீ போ... நீ வா... மொமண்ட்கள்...

>ஆலந்தூர் கே கே:

இன்று அதிமுகவின் இரண்டு வேட்பாளர்கள் மாற்றப்பட்டனர் - செய்தி

# ஒரு நாள் முதல்வர் போல ஒரு நாள் வேட்பாளர் போல..!

>கிராமத்தான் கிருஷ்:

சென்னை விமான நிலையம் : நான் தான் கெத்து...

அதிமுக வேட்பாளர் பட்டியல் மாற்றம்: அப்ப நாங்க யார்டா பீன்சு...?

>வாக்காளர் தாரா:

கடைசியா ஒரே ஒரு தடவ மட்டும் வேட்பாளர் பட்டியல மாத்திக்கிறேன் - அதிமுக தற்போதய நிலைமைகள் .

>பேன்னர்ஜி PhD:

#அமுதிக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஒருவருக்கு வாழ்த்துகள் கூறினேன். 'இன்னிக்கி டிவி பாக்கலையா?' என்றார். கொஞ்சம் சிரித்தார்; நிறைய அழுதிருப்பார்.

>கிருஷ்ணா:

எந்த சீரியல் டைரக்டர் அதிமுக வேட்பாளர் பட்டியலை தயார் செய்தார் என்று தெரியவில்லை. #இனி _இவருக்குப் _பதில் _அவர்!

>அஞ்சா வேடன்:

அதிமுக வேட்பாளர்கள் மேலும் சிலர் மாற்றம்: செய்தி

#விடுப்பா விடுப்பா..!

"அமைச்சரையே" மாத்துறாங்க, வேட்பாளர் தானே..!

>✯சண்டியர்✯:

அதிமுக வேட்பாளர் நிலம, பஸ்ல 3 பேர் சீட்ல தனியா உக்காந்த ஆம்பள மாதிரிதான்.. எங்க ஆள் வந்தா மாத்தி விட்ருவாங்களோன்னு பயமாவே இருக்கும்...

>இளவேனில்:

இது வேட்பாளர் பட்டியலா இல்லை வேடந்தாங்கல் சரணாலயமா? யார் யார்லாமோ வந்து போறாங்க!

#அதிமுக_வேட்பாளர்கள்_பட்டியல்

>Gokila ராங்கி Honey:

வரவர அதிமுக வேட்பாளர் பட்டியல், சிம்பு பட ரிலீஸ் தேதி மாதிரி ஆயிடுச்சு

.அடிக்கடி மாறிட்டே இருக்கு!

>மாடர்ன் தமிழன்: எது இன்று உன்னுடையதோ அது நாளை வேறொருவருடையது.

#அதிமுக வேட்பாளர் பட்டியல்

*

#Ind vs #WIல நம்மாளுங்க போட்ட பவுலிங்கும் அதிமுக வேட்பாளர் லிஸ்ட்டும் ஒன்னு..

எத்தன நோபாலு...எத்தன ரீபாலு...

>JagaKV:

ட்ரெயின் ரன்னிங் ஸ்டேட்டஸ் மாதிரி அதிமுக வேட்பாளர் கரண்ட் லிஸ்ட்க்கு ஒரு வெப்சைட் போட்டா நல்லாயிருக்கும்!

>❤தெறி என்ஜினியர் ❤:

தல57 - ஷங்கர், இல்ல முருகதாஸ், இல்லல்ல ராஜமௌலி எடுக்கிறாராம் இல்ல சிவாதான் கன்பார்ம்.

#அதிமுக வேட்பாளர் மாற்றங்கள்

>Elumalai Venaktesan:

தினமும் வேட்பாளர் பட்டியலை மாற்றியபடி இருந்தால் நம்மைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பார்கள்.. மற்றவர்களை மறந்துவிடுவார்கள்..நம்ம ராஜதந்திரம் யாருக்கு புரியப்போவுது..?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x