Published : 01 Apr 2016 06:16 PM
Last Updated : 01 Apr 2016 06:16 PM
தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் 2016-ல் வைகோவுக்கான இடம் தவிர்க்க முடியாதது. திமுக, அதிமுகவுக்கு எதிராக தேமுதிக- மக்கள் நலக் கூட்டணி என்று மூன்றாவது பெரிய கூட்டணியை அமைத்ததில் வைகோவுக்கு மிகப் பெரிய பங்கு உண்டு. அந்த விதத்தில் வைகோவை நெட்டிசன்கள் எப்படிப் பார்க்கிறார்கள்? சில பதிவுகள் இதோ:
வைகோ இன் தட் மோட்..
மை மதரு கேப்டன்.. மை பாதரு கேப்டன்.. மை பிரதரு கேப்டன்.. இன் த வேர்லட் எவ்ரிதிங் ஃபார் மீ ஈஸ் கேப்டன்!
கேப்டன விட்டு அன்புமணி மநகூல சேர்ந்திருந்தா சீனே வேற.
சுதீஷ் ஆர்வமிகுதியால் பேசிவிட்டார்- வைகோ.
ஒரு டவுட் ... ம.ந.கூட்டணியில் எல்லாருமே ஆர்வமிகுதியால் பேசுறவங்கதானே?
>Raju N :
கலிங்கப்பட்டி காமெடி பீசு, அட்டக்கத்தியான போர்வாள், தரகர், 1500 கோடி என இத்தேர்தலில் மிக மோசமாகச் சரிந்த பிம்பம் புரட்சிப்புயலினுடையதே! :-(
அதிகம் உணர்ச்சிவசப்படாமல் ஈழ விவகாரத்தை அணுகி, 1996 தேர்தலில் தமாகா ஆதரவுடன் களம் கண்டிருந்தால், என்றோ முதல்வராயிருப்பார் தலைவர் வைகோ. #மதிமுக
எங்களுக்கு ஆதரவாக ஒருஅலை வீசுகிறது: வைகோ
#மெரீனா கடற்கரையில் இருந்து பேசுறாருனு நினைக்கிறேன்...
கேப்டன் ஓட்டும் வண்டியில் நாங்கள் பயணம் செய்கிறோம்..!! - வைகோ
#அவரு டெல்லிக்கு போறதுக்கே பாஸ்போர்ட் எடுத்து கொடுத்தவரு.. உங்கள வச்சு வண்டி ஓட்ட மாட்டாரா என்ன..??
ம.ந.கூ. தலைவர்கள் 4 பேரும் காலேஜ் ரூம்மேட் மாதிரி மாறிட்டோம்! - வைகோ
#தட் மோமன்ட் பார் ம.ந.கூ.
எங்களிடமும் ஆயுதம் இருக்கிறது- வைகோ
#உங்க வாயே ஆயுதம் தானே கோபால்?!
எங்களுக்கு ஆதரவாக ஒரு அலை வீசுகிறது- வைகோ.
அது அலை இல்ல தல, நீங்க விரிச்ச வலை!
நாங்கள் காசற்றவர்கள் (அதனாலும்) ஆனாலும் மாசற்றவர்கள்
#வைகோ #MNKROCKS
கேப்டன் ஓட்டும் வண்டியில் நாங்கள் பயணம் செய்கிறோம்- வைகோ
#அறிவு, அனுபவம், பிரபலம் இதைவிட செல்வாக்கு முக்கியம் அமைச்சரே!
>SG with RG :
யாரை 'கிங்' ஆக்குகிறோம் என்பதை வைத்துதான் 'கிங் மேக்கர்'களுக்கு மரியாதை. #வைகோ
திருமாவளவன் தூங்கவில்லை சிந்தித்து கொண்டிருந்தார் - வைகோ
இதையேதான் ஆபிஸ் மீட்டிங்ல நான் சொன்னேன். மெமோ தந்திட்டாங்க!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT