Published : 21 Apr 2016 05:17 PM
Last Updated : 21 Apr 2016 05:17 PM
விருத்தாசலம் மற்றும் சேலத்தில் நடந்த ஜெயலலிதா பிரச்சார பொதுக் கூட்டங்களில் வெயில் கொடுமை தாங்காமல் அதிமுக தொண்டர்கள் இறந்திருக்கின்றனர்.
இதைப் போலவே அதிமுக வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில், வேட்பாளர்களை கீழே அமர வைப்பதும் சமூக வலைதளங்களில் பெரிதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
பொதுவாக ஜெயலலிதா பிரச்சாரம் எப்படி இருக்கிறது என்பது குறித்த நெட்டிசன்களின் பார்வை இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...
இவனுங்களுக்காக எல்லாம் நான் ஓட்டு கேட்டு வர வேண்டியாதாய் இருக்கிறதே என்பது போலவே பிரச்சாரம் செய்கிறார் ஜெ.
ஜெ.பிரசார கூட்டத்தில் 2 பேர் பலி!
ரெண்டு ஓட்டு போச்சே!
ஜெயலலிதா கூட்டத்தில் மீண்டும் ஒருவர் பலி?
இனி காணொளிக் காட்சி மூலம் 'ஜெ' பிரச்சாரம் மேற்கொள்வதே சிறப்பு.
பொதுக்கூட்டம், சட்ட சபை பேச்சுக்கள் ரெண்டுக்கும் வித்தியாசமே தெரியலயே... ஜெ தேர்தல் பிரச்சாரம்
நவீன தீண்டாமைக்கு மிகச்சிறந்த உதாரணம், அதிமுக வேட்பாளர் அறிமுகம்.
இன்னும் எம்ஜியாருக்கே போடுறதா நெனைச்சு ரெட்டை இலைக்கு மட்டுமே ஓட்டு போடுற பெருசுகளை, மே 16 வரை விட்டுவைக்க மாட்டார்கள்போல.
வெயில் அதிகமாயிருக்கே வெளியே விடலாம்ல..
அம்மா வரட்டும்னு காத்திருக்கோம்..
அம்மாதான் வந்தாச்சே. இப்பவாவது விடலாம்ல..
அம்மா போகட்டும்னு காத்திருக்கோம்
#சிக்கிட்டா சின்னாபின்னம்தான்
நான்கு பேர் அதிமுகவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மாண்டு போன விஷத்தில் மக்கள் காசிற்காக அத்தகைய கூட்டங்களுக்குப் போவதாக ஒரு கோணம் முன்வைக்கப்படுகிறது. காசிற்காகவும் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் இவர்களெல்லாம் விவசாயக் கூலிகள். வேர் விட்டுப் பரவியிருக்கும் நிலப் பிரபுத்துவத்தில் இன்னமும் அடிமைகளாக நடத்தப்படுபவர்கள்.
அருகில் உள்ள நாற்காலியில்கூட அமராமல் தரையில்தான் அமர்ந்து கொள்ளப் பழக்குவிக்கப்பட்டவர்கள். கூட்டத்திற்கு வர மாட்டோம் என்று சொல்கிற உரிமை அப்படியான கூட்டங்களுக்கு அழைத்துச் செல்லப்படுபவர்களில் 90 சதவீதம் பேருக்கு இல்லை என்பதே கள யதார்த்தம். இதில் எந்தக் கட்சியும் விதிவிலக்கல்ல.
சேலத்தில் ஜெ பிரச்சார கூட்டத்தில் ஒருவர் பலி.
போர்ல இறப்பது இயல்பு என்று சொன்ன வாய், பிரச்சாரத்தில் மக்கள் பலியாவதும் இயற்கை என்று சொல்லுமா?
தமிழகமெங்கும் ஜெ. அனல் பறக்கும் பிரச்சாரமாம். ஜெயா டிவில வாசிக்குறான்! மட்ட மத்தியானத்துல பிரச்சாரம் பண்ணா அனல் பறக்கத்தான்டா செய்யும்.
அனைத்து மக்களும் என் மக்கள்: அருப்புக்கோட்டையில் ஜெ. பிரச்சாரம்
#தேர்தல் நேரத்தில் மட்டுமா? எப்பவுமா?
ஜெ பிரச்சாரம்: ஹெலிபேடுக்காக 40 ஏக்கர் விவசாய நிலம் பாழ்.. செய்தி
#இப்படியே போனா கெயில் திட்டத்தை விட மோசமாகிவிடும்.
போர்க்களமாய் இருக்கும் என நினைத்தால் ஜெ.யின் தேர்தல் பிரச்சாரம் படு போர்.. கூடுதல் குறைவில்லாமல் சமதள கோடாய், வெறுப்பேற்றும் வகையில் செல்கிறது உரை.
மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும்- ஜெ..
போன வாரம் மதுவிலக்கு வேண்டும் என்று பிரச்சாரம்/பாடிய ஏழு பேர் மீது தேசதுரோக வழக்கு ஏன்?
தமிழகத்தை தலை நிமிரச் செய்வது தான் எங்கள் லட்சியம் - ஜெ பிரச்சாரம்
முதல்ல உங்க முன்னாடி நிற்பவர்களை தலை நிமிரச் செய்யுங்க.
தீவுத்திடலில் ஜெ பிரச்சாரம் - குவிந்த தொண்டர்கள்.
அஞ்சு வருசம் கழிச்சு பாக்குறாங்கள்ளே அதான்?!!
ஜெயலலிதா இன்னும் அஞ்சு பிரச்சாரம் போன போதும். ஆட்சி மாற்றம் அதுவாகவே நடக்கும்.
அதிமுக ஆட்சியில் வசந்தம் வீசுகிறது: ஜெயலலிதா - அந்த 8 ஏ.சி.களையும் நிறுத்துங்க... அப்பதான் வீசுவது வசந்தமல்ல... அனல் காற்று என புரியும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT