Published : 12 Jun 2014 09:00 AM
Last Updated : 12 Jun 2014 09:00 AM
யூனிட்களை வைத்து, மின் கட்டணத்தை எப்படி தெரிந்து கொள்வது?
அதில் சந்தேகம் ஏற்பட்டால், தங்களது மின் கணக்கீட்டில் 2 மாதங்களில் பயன்படுத்திய யூனிட்கள் எத்தனை என்பதை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக இணைய தளத்தில் கட்டண சேவைகள் ஆப்ஷனில், பில் கால்குலேட்டர் மூலம், தங்களுக்கான பயன்பாட்டுக் கட்டணம், நிலைப்புத் தொகை, அரசு தரும் மானியத் தொகை, மானியமின்றி கட்ட வேண்டிய தொகை ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.
#மின்சார கட்டணப் பட்டியலை யாரிடம், எங்கே பெறுவது?
மானியத்துடன் ஒரு யூனிட்டுக்கு மின் கட்டணம் எவ்வளவு மானியமின்றி மின் கட்டணம் எவ்வளவு என்ற விவரங்கள் அடங்கிய பட்டியல், மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக இணையத் தளத்திலும், அந்தந்த பிரிவு அலுவலகங்களிலும் கிடைக்கும்.
#மின் கட்டணத்தை யூனிட் அளவில் நாமே கணக்கிட முடியுமா?
மின் கட்டணப் பட்டியல் மூலம் நாமே கணக்கிட முடியும். இல்லையென்றால் எளிதாக மின் கட்டண கால்குலேட்டர் மூலம் கணக்கிடலாம். மின் பகிர்மானக் கழக இணையத் தளத்தில், மின் கட்டணம் (பில்லிங் சர்வீசஸ்) என்ற ஆப்ஷனில், கட்டண விகிதக் கணக்கீடு என்னும்
ஆங்கிலத்தில் பில் கால்குலேட்டர் என்ற பகுதி உள்ளது. அதில் தாங்கள் பயன்படுத்திய யூனிட் அளவை பதிவு செய்தால், உடனடியாக நமக்கு கட்டணம் எவ்வளவு என்பதை அறியலாம்.
#மின் கணக்கீடு எடுக்க வரும்போது வீட்டில் இல்லையென்றாலும், மின் கட்டண அட்டையில் பதிவு செய்யாவிட்டாலும் கட்டணத்தை அறிய முடியுமா?
கணக்காளர் வந்து சென்று 2 வேலை நாட்களுக்குப் பின் பிரிவு அலுவலக கம்ப்யூட்டர்களில், நுகர்வோரின் கட்டணம் எவ்வளவு என்பது பதிவாகிவிடும். பிரிவு அலுவலகம் செல்ல முடியாமல் அலுவலுக்கு செல்வோர், மின் வாரிய இணைய தளத்தில் மின் கட்டண முறைகள் பகுதியில், மின் கணக்கீடு விவரம் என்ற பட்டியலில், தங்களது மின் மண்டல பெயருடன், மின் இணைப்பு எண்ணை பதிவு செய்தால், உடனடியாக நுகர்வோரின் தற்போதையக் கணக்கீடு கட்டணம் எவ்வளவு என்பது தெரியும்.
#இணைய தளத்தில் மின் கட்டணம் செலுத்தவும், மின் இணைப்பு எண்ணைப் பதிவு செய்யவும் கட்டணம் அல்லது சிரமம் உண்டா?
எந்த சிரமும் இல்லை. கட்டணமும் இல்லை. மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக இணைய தளத்தில் பில்லிங் சர்வீசஸ் என்ற மின் கட்டண சேவைகள் பகுதிக்கு சென்று, புதிதாக இமெயில் ஐடி மற்றும் பாஸ்வேர்டு (ரகசியக் குறியீடு) பதிவு செய்து கொள்ள வேண்டும். இதில் பதிவு செய்யும் நுகர்வோர், தாங்கள் அளிக்கும் தகவல்கள் உண்மையானதுதானா என்பதை அறிந்துகொள்ள, வேறு ஏதாவது நடைமுறையில் உள்ள ஜிமெயில், யாஹூ போன்ற இ-மெயில் முகவரிகள் வேண்டியது அவசியமாகும். மின் இணைய தளத்தில் இ-மெயில் உருவாக்கிவிட்டால், பிரிவு அலுவலகங்கள், வங்கிகள், தபால் அலுவலகங்களுக்கு சென்று, கட்டணம் செலுத்த தேவையில்லை. இணையத்திலேயே 2 மாதங்களுக்கு ஒரு முறை பணம் செலுத்தலாம். மின் கணக்காளர் அட்டையில் பதிவு செய்யவில்லை, அதனால் கட்டணம் எவ்வளவு என்று தெரியவில்லையே என்று அச்சப்பட வேண்டிய அவசியமும் இல்லை.(மீண்டும் நாளை சந்திப்போம்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT