Published : 04 Apr 2016 05:06 PM
Last Updated : 04 Apr 2016 05:06 PM
தமிழக தேர்தல் களத்தில் 227 தொகுதிகளுக்கு அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டியிருக்கிறார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார் ஜெயலலிதா. தோழமை கட்சிகளுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன் வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், நடிகருமான சரத்குமார் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார். முக்குலத்தோர் புலிப்படையின் தலைவரான நடிகர் கருணாஸுக்கு திருவாடானை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இணையவாசிகள், அதிமுக வேட்பாளர் பட்டியல் குறித்தும், அறிவிப்பு குறித்தும் தங்கள் கருத்துக்களை சமூக வலைதளங்களில் கொட்டி வருகின்றனர். அதன் தொகுப்பு...
227 தொகுதிகள்ல அதிமுக தனியா நிக்குதாம், அதனால கெத்தாம்..
#அப்படி பாத்தா பி.ஜே.பி. 234 தொகுதிலயும் தனியா நிக்கிறாங்க; அவங்கதான் கெத்தோ கெத்து!
வெள்ளம் வந்த அனைத்து ஏரியாக்களிலும் அதிமுக தான் போட்டி.
#கெத்து அதிமுக
அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாக கூறி, தேமுதிகவில் இருந்து விலகிய பண்ருட்டி ராமச்சந்திரன், அதிமுக சார்பில் ஆலந்தூரில் போட்டி..
எனக்கு தெரிந்து இந்த முறை, அதிமுக 41 இடங்களில் வெற்றி வெற வாய்ப்பு உள்ளது.
பல வருஷத்துக்கு அப்புறமா, ஒரே கட்சி 10 வருஷம் ஆட்சி செய்ய போற சூழ்நிலை உருவாகிடுச்சு போல..
ஒவ்வொரு அதிமுக தொண்டனும், என்னைப் போன்ற நடுநிலைவாதிகளும் கர்வத்தோடு இருக்க வேண்டிய தருணம்!
அதிமுக வேட்பாளர் பட்டியலில் கணிதமேதை #குமாரசாமி பெயர் இல்லை.. வன்மையாக கண்டிக்கிறோம்..!
கண்ணா, இது அதிமுக வேட்பாளர் லிஸ்ட்!
எப்படியும் இரண்டு மூணு தடவ மாற்றப்படும். வெய்ட் அன்ட் ஸீ..!
அதிமுக 227 தொகுதிகளில் போட்டி.
கூட்டணி கட்சிகள்: மிச்சம் இருக்க 7யும் நீங்களே வச்சுக்கங்க, நாங்க சும்மா இருந்துட்டு போறோம்
அதிமுக கூட்டணியின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு. வேல்முருகனுக்கு இடமில்லை.
#இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா #பிம்பிளிக்கா_பிளாப்பி
அதிமுக 227 தொகுதி வேட்பாளர்கள் அறிவிப்பு
#மற்ற கட்சிகள் அனைத்தும் இந்த அறிவிப்பால் தனது வேட்பாளர்களை மறு மதிப்பீடு செய்தாகவேண்டும்
தா.பாண்டியன் :என்ன, அதிமுக வேட்பாளர் பட்டியல்ல என் பேரை காணோம்?
முத்தரசன்: அமைதி, அமைதி, இப்போ நாம தனி கூட்டணி மோட்ல இருக்கோம் !
>Ganeshan Gurunathan:ஃபேஸ்புக்கில் அதிமுக, திமுக என்று பேசுகிற பலர் 40 வயதைக் கடந்தவர்களாகவும், பாமக, நாதக, பாஜக என்று பேசுகிறவர்களில் பெரும்பாலானவர்கள் துடிப்புள்ள இளைஞர்களாகவும் இருக்கிறார்கள்...!
"ஒரு மாற்றம் பிறக்கிறது"...!
அதிமுக முதல் முறையாக 227 தொகுதிகளில் போட்டி!
கடைசி முறைன்னும் சொல்லலாம்.
அதிமுக இம்முறை சென்னையில் 16 தொகுதிகளிலும் ஆல்அவுட்!
அதிமுக கூட்டணியில் தமாக. வாசனுக்கு இடமில்லை. # தென்னந்தோப்பு தனி மரம் ஆச்சே.
ஓட்டுக்கு பணம் கொடுத்து தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்ற அதிமுக - திமுக கழகங்களின் தேர்தல் பார்முலாவை தேமுதிக - மநகூ தவிடு பொடியாக்கும்!
மத்த கட்சிலாம், நாங்க ஜெயிச்சா இத பண்ணுவோம்னு சொல்லி ஓட்டு கேட்கலாம். அதிமுக அப்டி சொன்னா ஏன் இவ்ளோ நாளா பண்ணலைனு கேட்க மாட்டாங்களா?
ஆர் கே நகர் தொகுதி வாக்காள பெருமக்களே, உங்கள் சகோதரி பேசுகிறேன்னு இனி வாட்ஸப்புல வாய்ஸ்மெயில் வரும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT