Published : 26 Apr 2016 06:20 PM
Last Updated : 26 Apr 2016 06:20 PM
தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக தலைவர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அவற்றில் அவர்களின் சொத்து மதிப்பு குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்நிலையில், தலைவர்களின் சொத்து மதிப்பு நெட்டிசன்கள் மத்தியில் பேசு பொருளாக மாறியிருக்கிறது. அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...
இவ்வளவு நாள் மாறி மாறி ஆட்சி செய்த கலைஞர், ஜெ. சொத்து கணக்கு பார்க்கும் போது கண்ணு வேர்க்குது அவ்வளவு நல்லவங்களா நீங்க?
எப்படி வந்தது இவ்ளோ பணம்?
அந்த அம்மாவின் சொத்து இரட்டிப்பு
அந்த ஐயாவின் சொத்து 8.5 கோடி உயர்வு
மருத்துவருக்கு 64 கோடி
போதிய அளவு சொத்து இல்லாத போது, பொது நலன் பேசப்படுகிறது!
ஜெ., சொத்து மதிப்பு 2011ல் 64 கோடி. 2016ல் 113 கோடி ரூபாய்.
#சசிகலா சிட்பெண்ட்ஸ்ல டெபாசிட் பண்ணி இருப்பார் போல, செம வட்டியா இருக்கு!
தவ வாழ்வு வாழவே 114 கோடி சொத்து தேவைப்படுகிறது என்றால் சாதாரண வாழ்வு நடத்தினால் எவ்வளவு தேவைப்படும்? அம்மா நீங்கள் தவவாழ்வையே தொடருங்கள்!
கருணாநிதி பெயரில் காரோ, விவசாய நிலமோ இல்லை: சொத்து மதிப்பு விவரத்தில் தகவல்...
ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு ரூ.118.40 கோடி - செய்தி
#இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு? போய் குமாரசாமி கிட்ட சொல்லுங்கப்பா.
அன்புமணியிடம் 30 லட்சம் சொத்து- செய்தி
#மாற்றம் ஏமாற்றம் அன்புமணி.
இருக்குறதுலையே பெரிய தமாசு அண்புமணியோட சொத்து மதிப்புதான்..
பிச்சைகாரன் கூட தனது உண்மையான சொத்தை சொல்லாத பொழுது, அரசியவாதிகள் உண்மையான சொத்துக்கணக்கை தெரிவிப்பார்கள் என்று நம்ப நாங்க என்ன லூசா?
5 வருடங்களில் இரண்டு மடங்கான ஜெயலலிதா சொத்து மதிப்பு!
தட் ..நாத்து நட்டாயா ,, கதிர் அறுத்தாயா ..மொமென்ட்
கருணாநிதி சொத்து மதிப்பு 63 கோடியாம் பா.
சாதாரண மக்களே கோடிக்கணக்கில் சொத்து வைத்துள்ள போது அன்புமணி தன் சொத்துக்கணக்கை நியாயமாக சொல்லிருக்க வேண்டும். நம்பகத்தன்மையில் சறுக்கல்.
இதெல்லாம் நம்புற மாதிரியாங்க இருக்கு?
நம்புனாதான் சோறுன்னு சொல்லிட்டாங்க.
ஒரு ரூவா சம்பளம் வாங்குன அம்மாவுக்கு 118 கோடி சொத்து. ஒண்ணுமேயில்லாம வந்த அய்யாவுக்கு 70 கோடி சொத்து. #வாழ்கஜனநாயகம்
அப்பிடி எதுல இன்வெஸ்ட் பண்ணுவாங்க? சொத்து மதிப்பு 5 வருசத்துக்கொருக்கா டபுளாகிட்டே போவுது?!
என்னிடம் சக்தியில்லை. மக்களாகிய நீங்கள்தான் எனக்கு சக்தி கொடுக்கவேண்டும்ன்னு சொன்ன ஏழை பங்காளரின் சொத்து மதிப்பு இந்த வயதிலும்.
தமிழக மக்கள் தான் எனது குடும்பம்- ஜெ.
118 கோடிய எப்படி பங்கு போட்டு கொடுப்பீங்க அம்மா?
அன்புமணிக்கு சொத்து மதிப்பு ரூ.30 லட்சம் மட்டுமே; வீடு, வாகனம் இல்லை!
ஐயோ பாவம் !! ஊருக்கு ஊரு வாடகை வண்டியில் போயிதான் பிரச்சாரம் பண்றாரு !!
ஏழை பங்காளர்கள் காட்டும் சொத்து கணக்கை பாத்து பயப்படாதிங்க மக்களே!
#அடடே! தேர்தல் கமிஷனுக்குக் காமிக்கிற சொத்து மதிப்பு வேற, இன்கம்டாக்ஸ் ஆசாமிகளுக்குக் காமிக்கிற சொத்து மதிப்பு வேற! மனைவி, துணைவி, இன்னபிற அப்புறம் வாரிசுகளுக்குக் காமிக்கற சொத்துக் கணக்கே தனிதான்.
"ஏங்க... இவ்வளவு சொத்து இருக்குன்னு கணக்கு காட்றீங்களே, எப்பிடி வந்துச்சு?"
'மாசாமாசம் போஸ்டாபிஸ்ல கட்டின பணம், எல்.ஐ.சி.யில் கட்டுனது.. அதோட வீட்டுக்கு பக்கத்துல ரெண்டு சீட்டு பிடிச்சேன்... எல்லாம் சேர்த்துத்தான் எலெக்ஷனுக்காக எடுத்தேன்..'
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT