Published : 25 Apr 2016 03:40 PM
Last Updated : 25 Apr 2016 03:40 PM
திருச்சியில் நடைபெற்ற அதிமுக பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில், முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில், நடிகை நமீதா அதிமுகவில் இணைந்துள்ளார். அரசியல் கட்சிகளில் நடிகர்கள் இணையும் போக்கு அதிகரித்து வரும் நிலையில், அதிமுகவில் நமீதா இணைந்தது, இணைய ஆர்வலர்களால் எவ்வாறு பார்க்கப்படுகிறது?
'சின்னம்மா' நமீதா.
மச்சான்ஸ் இவரு ஒங்க டொகுடில ஓட்டுக்கு நிக்குது
நீங்க ஓட்டு போடுது...
#நமீதா பிரச்சார ஏட்டிலிருந்து எடுத்த வரிகள்
என் வீடு சென்னையில தான், ரேஷன் கார்ட் சென்னையிலதான், ஓட்டும் சென்னையிலதான். - நமீதா.
#கட்சியும் எனக்குதான்னு சொல்ல போறாங்க!
பழ.கருப்பையா வெளியேறுவதும் நமீதா இணைவதுமாக அதிமுக படு மோசமான நிலைமையில் சென்றுகொண்டிருக்கிறது!
வருங்கால முதல்வர் செல்வி நமீதா வாழ்க...வாழ்க. அப்போ ஓபிஎஸ்ஸோட வாழ்க்க?
"அர்ஜூனா அர்ஜூனா.. வோட்டு போடு அர்ஜூனா!" இப்படி பாட்டு பாடி வோட்டு கேட்பார் போல நமீதா
எத்தனையோ கட்சிகள் அழைத்தும் அதிமுகவில் சேர்ந்தது ஏன்?- நமீதா.
பொன்னமராவதியில் கூப்டாக, காரைக்கால் பார்ட்டியில கூட கூப்டாக மொமெண்ட்
இந்தக் கருணாநிதி மச்சான் இருக்காரே என நமீதா பேச ஆரம்பித்தால், நாத்திகரான கலைஞருக்கு தலையெழுத்தென்றால் என்னவென்று புரிந்துவிடும்.
எங்களுக்கு பிரச்சாரக் கூட்டத்துக்கு நமீதா வந்தே ஆகணும்.. ஆமா வந்தே ஆகணும் ஆங்ங்...
#அதிமுக தொண்டர்கள் கையில் அம்மா படத்தை பச்சை குத்திட்டாங்க!
இனி மீதி இருக்கிறவங்க கையில் நமீதா படத்தை குத்துவாங்க போல !!
டிராக்டராக நகர்ந்து கொண்டிருந்த அதிமுகவை வேகப்படுத்த டேங்கராக வந்துசேர்ந்த பொன்மனச்செல்வி புரட்சிதலைவி நமீதா அவர்களை வரவேற்று மகிழ்கிறோம்.
கழகம் வளர்த்து விட்ட குஷ்பூ காங்கிரஸ் பக்கம், மானாடமயிலாட ஆளாக்கி விட்ட நமீதா அதிமுக பக்கம், பாவம் என் செய்வார் கலைஞர்?
*
கலைஞர், வைகோ, சீமான், அன்புமணி உணர்ச்சி ததும்ப 2 மணி நேரம் பேசுவதை, நமீதா ஹாய் மச்சான்ஸ் எனும் 2 நிமிடப் பேச்சால் வெல்லப் போகிறார்.
அதிமுக தொண்டர்களை தலை நிமிர செய்வேன் - ஜெ
நமீதா அதிமுகவில் சேர்ந்தார் - செய்தி.
இரண்டும் வேற வேற செய்திகள்.
நடிகை நமீதா அதிமுகவில் இணைந்தார். அதிமுக அரசு கவர்ச்சியான திட்டங்களை அறிமுகபடுத்தும்ன்னு சொன்னாங்க... அட அது இதுதானா ?
நமீதாதான் எங்கள் அடுத்த அம்மான்னு ஒரு கூட்டம் கூவுது. அடேய் அம்மாக்கு உண்டான மரியாதை போச்சே?!
அண்ணா, காமராஜர், எம்.ஜி.ஆர், கலைஞர் பேசிப் பேசி ஆட்சியப் பிடித்த காலம் போய் இப்ப நமீதா, ஆர்த்தி, சரஸ்வதி எல்லாம் அரசியல்னு ஏதோ பேசுறாங்க..
குஷ்பு என்றாலும் உதடுகள் ஒட்டுகிறது...
நமீதா என்றாலும் உதடுகள் ஒட்டுகிறது...
யாரை ஆதரிப்பது என்று ஒரே குழப்பமாக இருக்கிறது.
கட்சிகளின் பார்வை மக்கள் "நம்மீதா" என்றால் பேசுவதில்லை. தங்கள் கட்சியில்"நமீதா" என்பதே பேசப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT