Last Updated : 05 Jan, 2022 07:18 AM

 

Published : 05 Jan 2022 07:18 AM
Last Updated : 05 Jan 2022 07:18 AM

தினம் தினம் யோகா 35: அர்த்த சக்ராசனம்

உடம்பை சக்கரம் போல பின்பக்கமாக வளைக்கும் ஆசனம் ‘சக்ராசனம்’. அதில் பாதி அளவுக்கு வளைப்பதால் இதற்கு ‘அர்த்த சக்ராசனம்’ என்ற பெயர்.

நேராக நிமிர்ந்து நிற்கவும். கால்கள் சேர்ந்து இருக்கட்டும். ஒரு முறை மூச்சை நன்கு இழுத்து விடுங்கள். இரு கைகளையும் இடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள். உள்ளங்கை முழுவதும் இடுப்பு பகுதியில் நன்கு பதிந்திருக்கட்டும். விரல்கள் சேர்ந்து இருக்கட்டும். கைகளை மெல்ல நகர்த்தி பின்பக்கமாக கொண்டு செல்லவும். கைகளின் முட்டிகள் இயன்ற வரை நெருக்கமாக இருக்கட்டும்.

ஒரு முறை மூச்சு நன்கு இழுத்து விடுங்கள். இப்போது, உள்ளங்கைகளால் இடுப்பை முன்னோக்கி அழுத்தவும். மெதுவாக, மூச்சை இழுத்தபடியே பின்பக்கமாக இடுப்பை வளைத்து, அண்ணாந்து மேல் வானத்தை பார்க்கவும். கழுத்து பகுதி ரிலாக்ஸாக இருக்கட்டும். 1-10 எண்ணுங்கள். மூச்சை விட்டுக்கொண்டே சமநிலைக்கு வரவும்.

இந்த ஆசனம் செய்வதால் தோள், தொடை, இடுப்பு பகுதிகள் வலுப்பெறுகின்றன. தொடை, வயிறு பகுதியில் தேவையற்ற சதைகள் கரைகின்றன. கழுத்து வலி, தோள் வலி, சுவாசக் கோளாறுகள் சரியாகின்றன. நுரையீரல் நன்கு விரிவடைவதால், முழு சுவாசம் கிடைக்கிறது. கணையம் உள்ளிட்ட உறுப்புகளின் செயல்பாடு சீராகிறது. வெர்ட்டிகோ, மைக்ரைன், தலைவலி உள்ளவர்கள் நிதானமாக செய்வது அவசியம். அதிகப்படியான கழுத்து, முதுகு, இடுப்பு வலி, குடலிறக்கம், குடல் புண், அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.

நாளை – ‘96’ கதை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x