Published : 23 Mar 2016 04:03 PM
Last Updated : 23 Mar 2016 04:03 PM
தேமுதிக தலைவர் விஜயகாந்த், வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டி என அறிவித்திருந்தாலும், தங்கள் கூட்டணிக்கு விஜயகாந்த் வருவார் என மக்கள் நலக் கூட்டணி தொடர்ந்து நம்பிக்கை தெரிவித்து வந்தது. இதையடுத்து திடீர் திருப்பமாக இன்று காலையில், தேமுதிக மற்றும் மக்கள் நலக் கூட்டணி இணைந்து தேர்தலை சந்திப்பதாக தெரிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து நெட்டிசன்கள், புதிய கூட்டணி குறித்தும், திமுகவின் நிலை குறித்தும் தெரிவித்த கருத்துக்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பு.
Azhagi @azhagi :
வைகோ, மறுபடியும் ஒரு தடவை அவர் வேற லெவல்னு காமிச்சிருக்கார். அவர் மேற்கு ஐரோப்பாவுல அரசியல்வாதியா இருந்துருக்கணும்.
கோகில ராங்கி ஹனி @gokila_honey :
கோடி கோடியா அடிச்சு ஊழல்ல ஊறி திளைக்கும் திமுக, அதிமுகவை விட தேமுதிக எவ்வளவோ மேல் ;-)
#ஜோ செல்வா @joe_selva1 :
கலைஞர் இப்பவும் நீங்க வெற்றி பெற ஒரு வாய்ப்பு இருக்கு. திமுக ஆட்சிக்கு வந்தால் உதயநிநி நடிக்கமாட்டார்னு மட்டும் சொல்லுங்க.திமுக வெற்றி உறுதி.
கவிஞன் மோக்கியா @RameshTwts :
ம.ந.கூ- தேமுதிக கூட்டணியால் திமுக-வுக்கு எந்த பாதகமும் இல்லை: மு.க.ஸ்டாலின்
#நான் ஒன்னும் அழுவலையே, கண்ணு வேர்க்குது!
சால்ட்&பெப்பர் தளபதி @thalabathe :
இந்தக்கூட்டணி திமுக ஜெயிக்க வேண்டிய தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்கும் என்பது நிச்சயம்.
தானைத் தலைவியை கொஞ்சம் கூட அசைக்காது.
பித்தன் @kiramaththan :
கேப்டன் சூறாவளி சுற்றுப்பயணம் செஞ்சு, அதிக மேடைகளில் பேசினால்,
.
.
.
திமுக வெற்றி நிச்சயம்! :))
வந்தியத்தேவன் @kalasal :
தேர்தலுக்கு பிறகு மநகூ உடையும்... அதுல சில கட்சிகள் திமுகவோட சேர்ந்து, திமுக கூட்டணி ஆட்சியை பிடிக்கும்...
கேஆர்எஸ் கரச @kryes :
பொருள் இருக்கோ/ இல்லீயோ, விஜயகாந்த் முடிவை வரவேற்கிறேன் :)
திமுக/ அதிமுக அல்லாத, "ஓரளவு" மாற்று முயற்சி என்றாவது, வரலாற்றில் இடம்பெறட்டும்!
ஆல்தோட்டபூபதி @thoatta :
தேர்தலுக்கு முன்னால திமுக, தேமுதிக கூட்டணி அமையாட்டியும், தேர்தலுக்கு பிறகு கூட்டணி அமையும்னு நினைக்கிறேன்.
#யாருக்கும் மெஜாரிட்டி இருக்காது
தாறுமாறு அருள் @Arul28667667
ம.ந.கூ- தேமுதிக கூட்டணி திமுகவுக்கு எந்த பாதகமும் இல்லை: ஸ்டாலின்
#இனி நமக்கு நாமே தான்
விசாகன்™ @dineshsmc :
மக்கள் நல கூட்டணியில் இணைந்தது தேமுதிக - செய்தி
கலைஞர் : விடுகதையா...இந்த வாழ்க்கை.....
ஹோலி சேட்டு @SettuOfficial :
விஜயகாந்த் சி.எம். ஆவாரோ இல்லையோ, அரசியல்வாதி ஆயிட்டார்.
ரமணால அவனோடு அடுத்த மூவ் என்னன்னு தெரிலன்னு சொன்னவுடனே, விஜயகாந்த் தோச சுட்டுட்டு இருப்பார். தட் மொமன்ட்
அஞ்ஞானி @Annganitweets :
வைகோ இப்போது: கூட்டணிக்கு தலைமை என்னோடதுதான், ஆனா விஜயகாந்த் தான் முதல்வர் வேட்பாளர்
#தட் மாப்ள இவருதான் மொமண்ட்
அலெக்ஸ் பாண்டியன் @AxPn :
"நாங்கள் பஞ்சபாண்டவர்கள்.
விஜயகாந்த் - தர்மர், நான் அர்ஜூனன், திருமாவளவன் - பீமர், ஜி.ராமகிருஷ்ணன் - நகுலன், முத்தரசன் - சகாதேவன்" - வைகோ
செ.விமல் குமார் :
கேப்டன் பேசுறத சமாளிக்கிறதுக்காகவே வைகோவுக்கு, துணை முதலமைச்சர் பதவி தரணும்.
#மநகூ #கேப்டன்
பால தண்டபாணி @Bhala03 :
லெஃப்டுல பாஜக பக்கம் கை நீட்டி, ரைட்டுல்ல கலைஞருக்கு இன்டிகேட்டர் போட்டு, நேரா போய் மநகூ-ல் இணைந்தார் விஜயகாந்த்..
#கேப்டன்டா
புதிய மனிதன் 2016 @aarooraan :
மநகூவில் இணைந்தார் கேப்டன்.
#கட்டுமரம் கவிழ்ந்தது
rama krishnan @trichy_tiger :
மநகூ + தேமுதிக கூட்டணி உருவானதால் பாமக + பாஜக கூட்டணி உருவாகும் என்று நினைக்கின்றேன்.
ஆல்தோட்டபூபதி @thoatta :
ஒரு தலைவர் புரியுற மாதிரி பேச மாட்டாரு, இன்னொருத்தர் பிடிக்கிற மாதிரி பேச மாட்டாரு, இன்னொருத்தர் முடிக்கிற மாதிரி பேச மாட்டாரு!
#மநகூ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT