Published : 29 Dec 2021 05:16 AM
Last Updated : 29 Dec 2021 05:16 AM
நின்றுகொண்டு, இரு கால்களையும் இயன்றவரை அகலமாக வைத்துக் கொள்ளுங்கள். கால்களை ஒரேயடியாக அகட்டி வைத்தால் பேலன்ஸ் தவறி முன்பக்கமோ, பின்பக்கமோ விழுந்துவிட வாய்ப்பு உள்ளது. எனவே, கவனம் தேவை.
கைகளை பின்னால் கட்டிக் கொள்ளுங்கள். அதாவது, இடது கையால் வலது மணிக்கட்டை பிடித்துக் கொள்ளுங்கள். நன்கு ஒரு முறை மூச்சை இழுங்கள். மூச்சை விட்டவாறே, முதுகை கூன்போடாமல், இடுப்பில் இருந்து வளைத்து முன்னோக்கி குனியுங்கள். கழுத்து டைட்டாக இருக்காமல், ரிலாக்ஸாக இருக்கட்டும்.
உச்சந்தலை, தரையை நோக்கி இருக்கும் அளவுக்கு குனிந்திருக்க வேண்டும். தொடக்கத்திலேயே இதை முயற்சிக்க வேண்டாம். படிப்படியாக பயிற்சி செய்தால், நன்கு முன்னோக்கி குனிந்து, உச்சந்தலை தரையில் தொடும் வரைகூட செய்யலாம்.
கைகளை பின்னால் கட்டிக் கொள்ளாமல், இரு கைகளாலும் இரு கால் விரல் பகுதிகளை பிடித்தபடியும் இந்த ஆசனத்தை செய்யலாம். அல்லது, சுமார் ஒன்றரை அடி இடைவெளியில் இரு கைகளையும் நமக்கு முன்னால் தரையில் ஊன்றியவாறும் செய்யலாம். எவ்வாறு செய்வதாக இருந்தாலும், முதுகை கூன்போடாமல், இடுப்பில் இருந்து வளைத்துச் செய்வது அவசியம்.
தொடை பகுதிகள், முதுகுத்தண்டு நன்கு இழுக்கப்படுவதால், அவை வலிமையடைகின்றன. தலையை தரையில் பதிப்பதன் மூலம் படபடப்பு, டென்ஷன் மறைந்து மன அமைதி கிடைக்கிறது. ஆர்த்ரைடிஸ், அதிகப்படியான கை, கால், இடுப்பு, மூட்டு வலி உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.
நாளை – பாதி ஒட்டகம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT