Published : 26 Dec 2021 06:46 AM
Last Updated : 26 Dec 2021 06:46 AM
கால்கள் மடிந்த நிலையில் வஜ்ராசனத்தில் இருக்க, உடம்பை முழுமையாக நீட்டி தரையில் படுத்திருக்கும் நிலையே சுப்த வஜ்ராசனம்.
விரிப்பின் மீது உட்கார்ந்து, வஜ்ராசனத்தில் அமரவும். நன்கு ஒரு முறை மூச்சை இழுத்து விடவும்.
இப்போது, லேசாக பின்பக்கமாக சாய்ந்து, இரு கை முட்டிகளையும் ஒவ்வொன்றாக உடம்புக்கு அருகே ஊன்றிக் கொள்ளவும். மெல்ல, கை முட்டிகளையும் ஒவ்வொன்றாக தளர்த்திக்கொண்டு கீழே படுக்கவும். கைகளை தளர்த்தி, கால் முட்டிகள் மீது ரிலாக்ஸாக வைத்துக் கொள்ளவும்.
தொடக்கத்தில், முதுகுப் பகுதி தரையில் படாமல் மேல்நோக்கி எழும்பியிருக்கும். சுமார் 8-10 முறை ஆழ்ந்து மூச்சை இழுத்து விடவும். மெல்ல மெல்ல கீழே இறங்கும் முதுகுப் பகுதி, 6 அல்லது 8 சுவாசங்களுக்கு பிறகு, மெதுவாக தரையை தொட ஆரம்பித்திருக்கும்.
கை முட்டிகளை மீண்டும் உடம்பின் அருகே ஊன்றிக் கொள்ளவும். இரு கைகள் உதவியுடன் மெல்ல உடம்பை உயர்த்தி, நிமிர்ந்து உட்காரவும். மடித்திருக்கும் கால்களை நீட்டி, ரிலாக்ஸ் செய்துகொள்ளவும்.
படுத்த நிலையில் இருந்தே கால்களை நீட்டித்து விடுவிக்க முயற்சிக்க கூடாது. எழுந்து உட்கார்ந்து வஜ்ராசனத்துக்கு வந்த பிறகுதான், கால்களை நீட்ட வேண்டும். இல்லாவிட்டால், மூட்டு வலி, மூட்டு பிறழ்தல் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும். சுப்த வஜ்ராசனத்தின் பயன்களை தொடர்ந்து பார்க்கலாம்.
நாளை – வைரம் போன்ற உறுதி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT