Published : 30 Nov 2021 03:40 PM
Last Updated : 30 Nov 2021 03:40 PM
# 1948-ம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி வடகொரியா தனி நாடாக உருவானது.
# ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களால் 1948-ம் ஆண்டு முதல் வடகொரியா ஆளப்பட்டு வருகிறது.
# வடகொரியாவின் நிலப்பரப்பு மொத்தம் 47,399 சதுர மைல்கள்.
# உலகின் மிகப்பெரிய கால்பந்து மைதானம் வடகொரியாவின் பியாங்யாங் நகரில்
உள்ளது. இதில் 1,50 லட்சம் பேர் அமர்ந்து போட்டியை ரசிக்க முடியும்.
# சீனாதான் வட கொரியாவின் முக்கிய வர்த்தக கூட்டாளியாக உள்ளது. இந்நாட்டில்
இருந்து மீன் வகைகள் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
# இந்நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், குறிப்பிட்ட சில இடங்களுக்குச் செல்ல மட்டுமே அனுமதி உண்டு.
# 18 வயதைக் கடந்த ஒவ்வொரு ஆணும் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்பது அந்நாட்டில் சட்டமாக உள்ளது.
# வடகொரியாவின் தற்போதைய அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் முன்னாள் ஆட்சியாளர்களான அவரது அப்பா, தாத்தா ஆகியோரின் பெயர்களை குழந்தைகளுக்கு வைக்க வடகொரியாவில் தடை உள்ளது.
# வடகொரியாவில் மொத்தம் 3 தொலைக்காட்சி சேனல்கள்தான் உள்ளன. இதில் 2 சேனல்கள் வார இறுதி நாட்களில் மட்டுமே ஒளிபரப்பாகும்.
# வட கொரியாவில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடக்கும். ஆனால் வாக்குச்சீட்டில் அதிபர் விரும்பும் ஒரு வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னம் மட்டுமே அச்சிடப்பட்டிருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment