Last Updated : 26 Nov, 2021 03:06 AM

 

Published : 26 Nov 2021 03:06 AM
Last Updated : 26 Nov 2021 03:06 AM

பளிச் பத்து 145: சிறைச்சாலை

# குற்றவாளிகளை சிறையில் அடைக்கும் பழக்கம் எகிப்து நாட்டில் முதலில் தோன்றியதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

# சீனாவில் உள்ள சிறைச்சாலைகளில் 16.50 லட்சம் கைதிகள் உள்ளனர்.

# பிரேசில் சிறைச்சாலைகளில் உள்ள கைதிகள், ஒரு புத்தகத்தைப் படித்து முடித்தால்அவர்களின் தண்டனைக் காலத்தில் 4 நாட்கள் குறைக்கப்படும்.

# போதிய கைதிகள் இல்லாததால், நெதர்லாந்து நாட்டில் சிறைச்சாலைகள் மூடப்பட்டு வருகின்றன.

# இந்தியாவில் உ.பி., மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், உத்தராகண்ட், சிக்கிம் மற்றும் மேகலாயா ஆகிய மாநிலங்களில் உள்ள சிறைகளில் அதிக அளவிலான கைதிகள் உள்ளனர்.

# இந்தியாவில் 30 சதவீதம் கைதிகள்தான் 10-ம் வகுப்புக்கு மேல் படித்தவர்கள்.

# 2018-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கின்படிஇந்திய சிறைகளில் 19,242 பெண் கைதிகள் இருந்தனர். இது மொத்த கைதிகளின் எண்ணிக்கையில்4.12 சதவீதமாகும்.

# இந்தியாவில் மொத்தம் 1,350 சிறைச்சாலைகள் உள்ளன.

# இந்தியாவில் சிறையில் இருக்கும் கைதிகளில் மூன்றில் ஒரு பங்கு கைதிகள் படிப்பறிவு இல்லாதவர்கள்.

# இந்திய சிறைகளில் சுமார் 60 ஆயிரம் போலீஸார் பணியாற்றுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x