Last Updated : 24 Nov, 2021 03:07 AM

 

Published : 24 Nov 2021 03:07 AM
Last Updated : 24 Nov 2021 03:07 AM

பளிச் பத்து 143: லிஃப்ட்

# அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஒரு ஓட்டலில் 1859-வது ஆண்டில் முதன் முறையாக லிஃப்ட் பொருத்தப்பட்டது. கயிறுகள் மூலம் இவை இயக்கப்பட்டன.

# ஆரம்ப காலகட்டத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் உள்ள நட்சத்திரஓட்டல்களில் மட்டுமே லிஃப்ட் இருந்துள்ளது.

# முதலில், ‘ரைசிங் ரூம்’ என்ற பெயரில்தான் லிப்ஃட்கள் அழைக்கப்பட்டன.

# ஆரம்ப காலகட்டத்தில் லிப்ஃட்களில், மக்கள் அமர்வதற்காக பெஞ்சுகள் பொருத்தப்பட்டிருந்தன.

# எலிஷா கிரேவ்ஸ் ஒடிஸ் என்பவர்தான் நவீன ரக லிப்ஃட்களை வடிவமைத்தார்.

# லிப்ஃட்டில் செல்பவர்கள் குறிப்பிட்ட உடைகளைத்தான் அணிய வேண்டும் என்ற விதிகளும் ஆரம்ப காலகட்டத்தில் நடைமுறையில் இருந்தன.

# இப்போதுள்ள நவீன ரக லிஃப்ட்கள் 1920-ம் ஆண்டில் ஐரோப்பாவில் அறிமுகமானது.

# இப்போது யார் வேண்டுமானாலும் லிப்ஃட்களை இயக்க முடிகிறது. ஆனால் ஆரம்ப காலகட்டத்தில் ஜெர்மனியில் லிப்ஃட்களை இயக்க 3 ஆண்டுகள் பயிற்சி பெறுவது கட்டாயமாக இருந்துள்ளது.

# துபாயில் உள்ள உலகின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலீஃபாவில் உள்ள லிப்ஃட்கள் 163-வது மாடி (504 மீட்டர்கள்) வரை இயக்கப்படுகின்றன.

# எஸ்கலேட்டர்களை விட லிப்ஃட்கள் 20 மடங்கு வேகத்தில் செல்லும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x