Published : 20 Nov 2021 03:06 AM
Last Updated : 20 Nov 2021 03:06 AM

பளீச் பத்து 139: நீர்மூழ்கிக் கப்பல்

# முதலாவது நீர்மூழ்கிக் கப்பல் 1578-ம் ஆண்டு வடிவமைக்கப்பட்டது. வில்லியம் போர்ன் என்பவர் நீர் புகாத தோலைப் பயன்படுத்தி இக்கப்பலை வடிவமைத்தார்.

# ராணுவத்தினர் பயன்படுத்துவதற்கான முதலாவது நீர்மூழ்கிக் கப்பல் அமெரிக்காவின் டேவிட் புஷ்னெல் என்பவரால் 1776-ம் ஆண்டு வடிவமைக்கப்பட்டது. இதன் பெயர் ‘டர்டில்’.

# நீர்மூழ்கிக் கப்பலில் பயன்படுத்தப்படும் பெரிஸ்கோப், 1854-ம் ஆண்டு பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த மேரி-டேவி என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.

# முதலாம் உலகப் போரின்போது ஜெர்மனியிடம் 20 நீர்மூழ்கிக் கப்பல்களும், இங்கிலாந்திடம் 74 நீர்மூழ்கிக் கப்பல்களும் இருந்தன.

# இரண்டாவது உலகப் போரில் அமெரிக்கா 314 நீர்மூழ்கிக் கப்பல்களை பயன்படுத்தியது.

# போர்க்களங்களில் மட்டுமின்றி ஆய்வுப் பணிகளிலும்நீர்மூழ்கிக் கப்பல்கள் பயன்படுத்தப்படுகின்றன.

# 1954-ம் ஆண்டில் அணு ஆயுதத்தை பயன்படுத்தக்கூடிய நீர்மூழ்கிக் கப்பல் முதல்முறையாக கண்டுபிடிக்கப்பட்டது.

# ஜெர்மானியர்கள் இரண்டாம் உலகப் போரின்போதுநீர்மூழ்கிக் கப்பலை ‘யு போட்’ என்று அழைத்தனர்.

# நீர்மூழ்கிக் கப்பல்களை பல மாதங்களுக்கு தண்ணீருக்கு அடியில் வைத்திருக்க முடியும்.

# நீர்மூழ்கிக் கப்பல்களில் சோனார் ராடர்கள் பயன்படுத்தப்படுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x