Published : 19 Nov 2021 03:07 AM
Last Updated : 19 Nov 2021 03:07 AM
# வடக்கு வியட்நாமுக்கும், அமெரிக்காவின் ஆதரவைப் பெற்ற தெற்கு வியட்நாமுக்கும் இடையே 1955 முதல் 1975 வரை வியட்நாம் போர் நீடித்தது.
# வியட்நாம் போரில் 8,744,000 அமெரிக்க வீரர்கள் பங்கேற்றனர். இதில் சுமார் 58 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.
# 13 லட்சம் போர் வீரர்களும், 10 லட்சம் பொதுமக்களும் வியட்நாம் போரில் உயிரிழந்தனர்.
# ஆஸ்திரேலியா, தென் கொரியா, நியூஸிலாந்து உள்ளிட்ட நாடுகளும் இப்போரில் தெற்கு வியட்நாமுக்கு ஆதரவாக ராணுவத்தை அனுப்பின.
# இப்போரில் வடக்கு வியட்நாமுக்கு சோவியத் யூனியன் ஆதரவு அளித்தது.
# வியட்நாம் போரைக் கண்டித்து அமெரிக்காவிலேயே போராட்டங்கள் நடந்துள்ளன.
# இப்போரில் வடக்கு வியட்நாம் படைகள் ஏகே 47 வகை துப்பாக்கிகளையும், தெற்கு வியட்நாம் மற்றும் அமெரிக்க படைகள் எம்-16 ரைபிள்களையும் அதிகமாகப் பயன்படுத்தின.
# 1963-ம் ஆண்டில் வியட்நாம் போரை நிறுத்த அமெரிக்க அதிபர் கென்னடி விரும்பியுள்ளார். ஆனால் அதை செயல்படுத்துவதற்குள் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
# நிக்சன் அமெரிக்க அதிபரான பிறகு, வியட்நாமில் இருந்து அமெரிக்க படைகள் பின்வாங்கின.
# 1975-ம் ஆண்டில் தெற்கு வியட்நாமின் தலைநகரான சாய்கானை வடக்கு வியட்நாம் வீரர்கள் கைப்பற்றினர். இதன்மூலம் 2 நாடுகளையும் இணைந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT