Published : 18 Nov 2021 03:06 AM
Last Updated : 18 Nov 2021 03:06 AM

பளிச் பத்து 137: ஸ்டிராபெரி

# ஸ்டிராபெரி பழங்கள் முதலில் பிரான்ஸ் நாட்டில் பிரிட்டானி என்ற நகரில் விளைவிக்கப்பட்டன.

# உலகில் 103 வகையான ஸ்டிராபெரி பழங்கள் உள்ளன.

# ஆரஞ்சு பழங்களைவிட ஸ்டிராபெரி பழத்தில் வைட்டமின்-சி சத்து அதிகமாக உள்ளது.

# சிவப்பு நிறம் மட்டுமின்றி மஞ்சள், நீலம், வெள்ளை, கருப்பு நிறங்களிலும் பழங்கள் உள்ளன.

# பெல்ஜியம் நாட்டில் ஸ்டிராபெரி பழத்துக்காகவே பிரத்யேக அருங்காட்சியகம் உள்ளது.

# ஒவ்வொரு ஸ்டிராபெரி பழத்திலும் சுமார் 200 விதைகள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

# ஆண்டுதோறும் சுமார் 9 மில்லியன் டன் ஸ்டிராபெரி பழங்கள் விளைவிக்கப்படுகின்றன.

# ஸ்டிராபெரி பழ உற்பத்தியில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.

# உலகின் மிகப்பெரிய ஸ்டிராபெரி பழம் ஜப்பானில் கோஜி நாகோ என்ற விவசாயியால் விளைவிக்கப்பட்டது. இதன் எடை 250 கிராம்.

# ஸ்டிராபெரியால் செய்யப்பட்ட ‘டாஹோ’ என்ற பழரசம் பிலிப்பைன்ஸ் நாட்டு மக்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x