Last Updated : 03 Nov, 2021 03:07 AM

1  

Published : 03 Nov 2021 03:07 AM
Last Updated : 03 Nov 2021 03:07 AM

பளிச் பத்து 123: ஒட்டகம்

‘கேமல்’ (ஒட்டகம்) என்ற சொல், அரேபிய மொழியில் இருந்து வந்தது. இச்சொல்லுக்கு ‘அழகு’ என்று பொருள்.

ஒட்டகங்கள் ஒரே நேரத்தில் 200 லிட்டர் தண்ணீர்வரை குடிக்கும்.

தண்ணீரும் உணவும் இல்லாமல் ஒட்டகங்களால் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்க முடியும்.

ஒட்டகங்கள் 3 மீட்டர் உயரம்வரை வளரும்.

உலகில் 1 கோடியே 40 லட்சத்துக்கும் மேற்பட்ட ஒட்டகங்கள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

ஒட்டகங்களால் அதிகபட்சமாக மணிக்கு 40 மைல் வேகத்தில் ஓட முடியும்.

மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஒட்டக இறைச்சியை உண்கின்றனர். அரேபிய நாட்டில் திருமணங்களின்போது விசேஷ உணவாக ஒட்டக வறுவல் பரிமாறப்படுகிறது.

பண்டைக்காலத்தில் குதிரைப்படையைப் போல ஒட்டகப்படையும் பல நாடுகளில் இருந்துள்ளன.

கண்களை தூசி மற்றும் வெயிலில் இருந்து காப்பதற்காக ஒட்டகங்களுக்கு 3 கண் இமைகள் உள்ளன.

இந்தியாவில் உள்ள ஒட்டகங்களில் சுமார் 80 சதவீதம் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x