Published : 20 Oct 2021 03:07 AM
Last Updated : 20 Oct 2021 03:07 AM
இஸ்ரோ (இந்திய விண்வெளி ஆய்வு மையம்) அமைப்பை டாக்டர் விக்ரம் சாராபாய், 1969-ம் ஆண்டில் தொடங்கினார்.
1981-ம் ஆண்டில் ஆப்பிள் செயற்கைக்கோளை ஒரு மாட்டு வண்டியில் ஏவுதளத்துக்கு எடுத்துச் சென்று இஸ்ரோ ஏவியது.
இஸ்ரோ அமைப்பால் விண்ணில் செலுத்தப்பட்ட முதல் செயற்கைக் கோளாக ஆர்யபட்டா உள்ளது.
1975-ம் ஆண்டில் ரஷ்ய நாட்டின் உதவியுடன் ஆர்யபட்டா விண்ணில் ஏவப்பட்டது.
இஸ்ரோ அமைப்புக்கு இந்தியா முழுவதும் 13 மையங்கள் உள்ளன.
முழுக்க முழுக்க இந்தியாவால் உருவாக்கப்பட்டு விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கைக் கோள் எஸ்எல்வி - 3 ஆகும்.
கடந்த 40 ஆண்டுகளில் இஸ்ரோ அமைப்புக்காக செலவிடப்பட்ட தொகை, அமெரிக்காவின் நாசா ஆய்வு மையத்தின் அரை ஆண்டு பட்ஜெட் கணக்குக்கு சமமாகும்.
மார்ஸ் கிரகத்தை தங்கள் முதல் முயற்சியிலேயே எட்டிய ஒரே விண்வெளி அமைப்பாக இஸ்ரோ உள்ளது.
இந்தியாவின் மார்ஸ் திட்டம் வெறும் 450 கோடி ரூபாயில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவுக்காக மட்டுமின்றி, வேறு 21 நாடுகளுக்காகவும் இஸ்ரோ அமைப்பு செயற்கைக் கோள்களை ஏவியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT