Published : 22 Mar 2016 06:37 PM
Last Updated : 22 Mar 2016 06:37 PM
'பழம் நழுவி பாலில் விழும்' என்று திமுக கூட்டணியில் தேமுதிக சேரும் என்று கருணாநிதி நம்பிக்கையைப் பகிர்ந்தபோதே சமூக வலைதளங்களில் பலதரப்பட்ட பதிவுகள் பரபரத்தன.
'தனித்துப் போட்டி' என்று விஜயகாந்த் அறிவித்த பின்னர், திமுக தலைவர் கருணாநிதியின் நம்பிக்கையை முன்வைத்து கவலை, கலாய்ப்பு, அலசல், ஆய்வு ரீதியில் போஸ்ட் மழை பொழிந்தன.
இந்த சலசலப்பு ஓய்ந்த நிலையில், தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நீடிக்கிறது என்று கருணாநிதி மீண்டும் தகவல் சொல்ல, மறுபடியும் முதலிலிருந்து இணையவாசிகள் பரபரத்தனர். DMDK ட்விட்டர் ட்ரெண்டிங்கிலும் வலம் வந்தது.
இப்போது, 'தேமுதிகவுக்கு புதிதாக அழைப்பு ஏதும் விடுக்கவில்லை; தேமுதிகவுடன் இதுவரை கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறவே இல்லை' என திமுக பொருளாளர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். இந்தக் கூட்டணி குழப்படிகளை இணையவாசிகள் எப்படிப் பார்க்கிறார்கள்? - இதோ சில சாம்பிள் பதிவுகள்...
இராம.மோகன் @Nanbaendaaa:
தேமுதிக கூட்டணிக்கு வரும் எனும் நம்பிக்கை இன்னும் இருக்கிறது - கலைஞர்.
# வரும் தம்பி.. ஆனா வராது..
மருத்துவர் ராமதாஸ் @drramadoss :
தேமுதிக கூட்டணிக்கு வரும் என்ற நம்பிக்கை இன்னும் உள்ளது: கலைஞர் - பகுத்தறிவுக் கட்சித் தலைவருக்கு இப்படி ஒரு மூட நம்பிக்கையா?
தேமுதிக கூட்டணிக்கு வரும்: கலைஞர் நம்பிக்கை - புதிய பாத்திரம், புதிய பால் ஆனால், பழைய பழம்!
ராதா @RATHA_RADHA :
நீ எவனையோ நெனச்சி நெனச்சி வாழாவெட்டி ஆவப் போற #தேமுதிக
நான் உன்னையே நெனச்சி வெட்டியா வாழாம இருக்க போறேன் #திமுக
ஆஷிக் கிராமத்தான் @ashik_twitz :
தேமுதிக வராது என நினைக்கவில்லை. தேமுதிகவுடன் பேசி வருகிறோம்- கருணாநிதி
#தட் போன் வயர் பிஞ்சு நாலு மாசமாச்சு மொமன்ட்
தங்கதுரை சிவன் @tweetstd :
மூழ்கும் கப்பல் போல் உள்ள திமுக, தற்போது தேமுதிக கூட்டணிக்காக கெஞ்சிக்கொண்டிருக்கிறது: அன்புமணி ராமதாஸ்
#கடலிலே தூக்கி போட்டாலும் நான் கட்டுமரமாகத்தான் மிதப்பேன்...
சி.பி.செந்தில்குமார் @senthilcp:
# கூட்டணி அமைஞ்சுட்டா திமுகவுக்கு அது டானிக், அமையலைன்னா டைட்டானிக்
விஜயகாந்த், பிரேமலதா மீது விமர்சனம் வேண்டாம்- அதிமுக பேச்சாளர்களுக்கு ஜெ., திடீர் தடை
# சஸ்பென்ஸ் படத்துல க்ளைமாக்ஸ்ல தான் ட்விஸ்ட் வரும்
அவதார் @avadhaar :
தமிழில் எனக்கு பிடிக்காத வார்த்தை மன்னிப்பு- ரமணா
தமிழில் எனக்கு பிடிக்காத வார்த்தை பழம்- கருணாநிதி
மதுரையான் @CitizenSaravana :
அரசியல்னா என்ன அண்ணே?
திமுகவை ஒழிக்கவேண்டும்னு பிரேமலதா சொன்னதுக்கு அப்புறமும், விஜயகாந்த் வீட்டு வாசல்ல கலைஞர் நிக்கிறாரு பாரு, அதான் அரசியல்!
யுகராஜேஸ் @yugarajesh2 :
கெட்ட குமாரனை போல மனம் திருந்தி திமுக கூட்டணிக்கு விஜயகாந்த் வருவார் - பேராயர் எஸ்ரா சற்குணம்
#இவரு திமுகவோட ஆதினம் போல..!!
விவசாயி மகன் @sridharsta :
திமுக என்பது ஐஸ்க்ரீம்; விஜயகாந்த் அதில் இருக்கும் செர்ரி பழம் - துரைமுருகன்
ஏன் தலைவரே,
ஐஸ் உருகினால்
பழம் நழுவி
பாலில் விழுமா?
செந்தில்குமார் @senthilcp :
தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை: கருணாநிதி - ஸ்டாலின் இடையே முரண்பாடு
#அழகிரியையும் கூட்டிக்குங்க, செம ஜாலியா இருக்கும்
சின்னக்கோழி பாலா@Milkyboybala :
தேமுதிக-விற்கு புதிதாக அழைப்பு விடுக்கப்படவில்லை - மு.க.ஸ்டாலின்
# ஆமா ஆமா ஏற்கனவே நிறைய மிஸ்டுகால் குடுத்தாச்சி!
பிரகாஷ் @PrakashMahadev :
தேமுதிகவுக்கு புதியதாக அழைப்பும், பேச்சுவார்த்தையும் இல்லை: மு.க. ஸ்டாலின்
#நீங்க கலைஞர் கூட பர்ஸ்ட் பேச்சுவார்த்தை நடத்துங்க தளபதி..
மெத்த வீட்டான் @HAJAMYDEENNKS :
கூட்டணிக்கு வராத விஜயகாந்தை திரும்ப திரும்ப அழைக்கும் திமுக வின் நிலை வருத்தம் அளிக்கிறது - வைகோ
#உங்களை நினைச்சா அதைவிட வருத்தமா இருக்கே!
சி.பி.செந்தில்குமார் @senthilcp :
தமிழ் நாட்டில் திமுக, அதிமுக ஆட்சி இரண்டும் அட்லி படம் மாதிரி.
ஒரே ரீமேக் பார்முலா; ஆள் மட்டும் வேற வேற!
கவுண்டமணி @Writter_Naina :
இப்படியே போச்சுன்னா, விரைவில் இப்படி ஒரு அறிவிப்பு வரும்
#தேமுதிக கூட்டணியில் திமுக இணைந்தது - கலைஞர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT