Published : 16 Oct 2021 06:10 AM
Last Updated : 16 Oct 2021 06:10 AM
# சூரியகாந்திப் பூக்கள், சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் தோன்றியது.
# ரஷ்யாவின் தேசிய மலராக சூரியகாந்தி உள்ளது.
# ஒரு சூரியகாந்திப் பூவுக்குள் 2 ஆயிரம் விதைகள் இருக்கும். இவ்விதைகள் எண்ணெய் தயாரிக்கப் பயன்படும்.
# சூரியகாந்தி எண்ணெய் உற்பத்தியில் ரஷ்யா முதல் இடத்தில் உள்ளது.
# சூரியகாந்தி செடிகள் 12 அடி உயரம் வரை வளரும்.
# உலகில் 70 வகையான சூரியகாந்திப் பூக்கள் உள்ளன.
# எல்லா சூரியகாந்தி பூக்களிலும் எண்ணெய் விதைகள் இருக்காது. ஒருசில வகை சூரியகாந்தி பூக்களில் மட்டுமே அத்தகைய விதை இருக்கும்.
# 2012-ம் ஆண்டில் சூரியகாந்தி விதை விண்வெளிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
# உலகின் மிகப்பெரிய சூரியகாந்திப் பூ 1983-ம் ஆண்டு கனடாவில் பூத்தது. அதன் விட்டம் 32 அங்குலம்.
# ஜெர்மனியில் ஆண்டுதோறும் சூரியகாந்தி திருவிழா நடத்தப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT