Published : 14 Oct 2021 05:54 AM
Last Updated : 14 Oct 2021 05:54 AM
கி.பி. முதலாம் நூற்றாண்டு முதல் எலுமிச்சை மரங்கள் பயிரிடப்பட்டு வருவதாக அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் முதலில் எலுமிச்சை மரங்கள் பயிரிடப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
எலுமிச்சை உற்பத்தியில் இந்தியா முதல் இடத்தில் இருக்கிறது. இங்கு ஆண்டுதோறும் 3 மில்லியன் டன் எலுமிச்சம் பழங்கள் விளைகின்றன.
இந்தியாவுக்கு அடுத்தபடியாக மெக்சிகோ, சீனா, அர்ஜென்டினா ஆகிய நாடுகளில் அதிக அளவில் எலுமிச்சம் பழங்கள் விளைகின்றன.
வளைகுடா நாடுகளில் 7-ம் நூற்றாண்டில்தான் எலுமிச்சம் பழங்கள் அறிமுகமாகின.
எலுமிச்சை மரங்கள் 20 அடி உயரம் வரை வளரும்.
இம்மரங்கள் 50 ஆண்டுகள் வரை இருக்கும்.
எலுமிச்சம் பழங்களில் வைட்டமின் சி சத்துகள் அதிகமாக உள்ளன.
எலுமிச்சம் பழங்களில் சராசரியாக 8 விதைகள் இருக்கும்.
உலகின் மிகப்பெரிய எலுமிச்சம் பழம் இஸ்ரேலில் விளைந்தது. இதன் எடை 5.265 கிலோ.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT