Published : 28 Sep 2021 03:18 AM
Last Updated : 28 Sep 2021 03:18 AM
கரடிகள் பெரும்பாலும் மாமிசம், மீன் ஆகியவற்றை உண்டு உயிர்வாழும். ஒருசில வகை கரடிகள் மட்டும் செடிகளையும், பூச்சிகளையும் உண்ணும்.
உலகில் 8 வகையான கரடிகள் உள்ளன.
கரடிகள் பனிக்காலங்களில் அதிக நேரம் உறங்கும்.
கருப்பு நிறக் கரடிகளால் மணிக்கு 35 மைல் வேகத்தில் ஓட முடியும்.
ஒரு கரடியால் மற்றொரு கரடியின் முகத்தை அடையாளம் காண முடியும்.
கரடிகளுக்கு 42 பற்கள் உள்ளன.
கரடிகளால் வேகமாக மரம் ஏறவும், நீச்சல் அடிக்கவும் முடியும்.
பனிக்கரடிகளால் ஓய்வெடுக்காமல் 100 மைல் தூரம் வரை நீந்திச் செல்ல முடியும்.
தங்களுக்குப் பிடித்த மரத்தில் முதுகை உரசுவதற்காகவே நீண்டதூரம் நடந்துசெல்லும் குணம் கரடிகளுக்கு உண்டு.
ஆசியாவில் உள்ள கருப்பு நிறக் கரடிகளுக்கு, மற்ற வகை கரடிகளைவிட மிகப்பெரிய காதுகள் உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT