Published : 11 Mar 2016 06:05 PM
Last Updated : 11 Mar 2016 06:05 PM

விஜயகாந்தின் முடிவு சரியா? - நெட்டிசன்கள் கருத்து!

சட்டப்பேரவைத் தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை. தேமுதிக தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். அவரது இந்த முடிவு குறித்து ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

அதிலிருந்து சில பதிவுகள்:

வேல்முருகன்

விஜயகாந்த் முடிவால் திமுக அணிக்கு பாதிப்பில்லை: குஷ்பு

அத நீங்க சொல்ல கூடாது உங்க கடை முதலாளிய சொல்ல சொல்லுங்க!

சி.பி.செந்தில்குமார் ‏

விஜயகாந்த் முடிவால் திமுகவுக்கு பாதிப்பு இல்லை- மகிழ்ச்சியே: பேரா. சுப.வீரபாண்டியன்

#உதடு சிரிக்குது. கண் கலங்குது ஏன் சார்?

சுஷ்மா சேகர்

விஜயகாந்த் முடிவில் மாற்றமின்றி கடைசி வரை இருந்தால் ஓட்டுக்கள் பிரியும். கட்சிகளின் மேல் மக்கள் வைத்திருக்கும் மதிப்பின் உண்மைநிலை தெரியும். விஜயகாந்த்/ பிரேமலதா எடுத்த முடிவு தமிழக வரலாற்றை மாற்றும் என்று நம்புகிறேன். தனித்துப் போட்டியிடும் துணிச்சலுக்கே, முரசுக்கு தான் என் ஓட்டு!

ராம்

கேப்டன், நீங்க தமிழகத்தில் மூன்றாவது அணியாக வர்றது முக்கியமல்ல. தமிழகத்தில் மூன்றாவது தலைவரா வரணும்.

#காமராஜர், MGR, கேப்டன்

ஷான் கருப்புசாமி

விஜயகாந்தின் தனித்துப் போட்டியிடும் முடிவால் திமுக பாதிக்கப்படும் என்று ஒரு கருத்து உள்ளது. அதிருப்தி ஓட்டுகள் பிரிவது நல்லது என்று அதிமுக நினைக்கும். அவற்றில் ஓரளவு உண்மை இருக்கிறது. அதே நேரம் திமுக, அதிமுக என்ற இரண்டு சக்திகளை சிறிய கட்சிகள் புறக்கணித்திருப்பதை இந்தத் தேர்தலின் முக்கியமான நிகழ்வாகப் பார்க்கலாம்.

மாறி வரும் மக்கள் மனோநிலையையே இந்தக் கட்சிகளின் நிலைப்பாடுகள் பிரதிபலிக்கின்றன. மாறி மாறி ஆண்டு வரும் இரண்டு கட்சிகளின் மீதும் ஒரு சலிப்புத்தன்மை மக்களிடையே ஏற்பட்டு வருகிறது. ஆனால் அந்த சலிப்பை ஒருமுகப் படுத்தும் வாய்ப்பு இப்போதைக்கு இல்லை. அந்த இடைவெளியில் இருந்து விஜயகாந்த் சென்ற தேர்தலின்போது விழுந்துவிட்டார். இப்போது அன்புமணி, மக்கள் நலக் கூட்டணி ஆகியவையும் போட்டிக்கு வந்து விட்டார்கள். அந்த இடத்தில் ஒரே கூட்டம்.

தனசேகரன்

20 நாளா சன் டிவி, கே டிவி என எல்லாத்துலயும் கேப்டன் நடிச்ச படமா போட்டும், ஒண்ணும் மசியலயே!

ஆனந்த்ராஜ்

கட்டுமரத்துக்கு எதுக்குயா கேப்டன்?

விஜய்

ஒருதடவ கேப்டன்கிட்ட ஆட்சிய கொடுத்து பாக்கிறதில தப்பேதும் இல்லைன்னு நினைக்குறேன்.. சரியா பேசுறேனா??

இந்தியன்

கூட்டணி அப்படினு போகாம தனியா நின்னு கெத்து காமிச்ச கேப்டன்க்கு தான் என் முதல் ஓட்டு

தர்மா

பம்பரத்திற்கு ஆக்கர்வைச்சு

சூரியனை அஸ்தனமாக்கி

தாமரையை மூழ்கச்செய்து

'முரசு' கொட்டி அறிவித்தார் கேப்டன்

"தனித்துபோட்டி" என்று

டிமிடித் பெட்கோவ்ஸ்கி

கேப்டன்...

‪#‎வெல்டன்‬

அருள் எழிலன்

விஜயகாந்த் இந்த முடிவை எடுத்ததை வரவேற்கிறேன். பலருக்கும் இது ஒரு பாடமாக அமையட்டும். இதுவரை அவருக்கு இருந்த அரசியல் முக்கியத்துவம் இனி இருக்காது.

பிரபு எம்.பி.ஆர்.

தேமுதிக தனித்து போட்டி: மக்கள் நல கூட்டணியை உடைக்க திமுக முயற்சி செய்யும் அல்லது தேமுதிக நிர்வாகிகளுக்கு வலை வீசும்

உமர் ஃபரூக்

கேப்டன் தனித்து போட்டி என்பது சாத்தியமில்லை. பாஜகவுடன் கூட்டணி என்றால் காசு வாங்கிட்டு சேர்ந்து கொண்டார் என பேச்சு வரும். இப்போ அவர் தனித்து போட்டி; கூட்டணி வேண்டும் என்போர் விஜயகாந்தை முதல்வராக ஏற்றுக் கொண்டு தேமுதிக கூட்டணியில் இணையலாம் என்ற அறிவிப்பை பார்க்கும்போது ஓரிரு நாளில் பாஜக தேமுதிக கூட்டணி உறுதி செய்யப்படும் என்றே தோன்றுகிறது!

அன்பழகன் வீரப்பன்

உடன்பிறப்பே உணர்ச்சிவயப்படாதே...

காட்சிகள் மாறும்... கூட்டணி அமையும்.

புவனேஸ்வரன் ராஜசேகர்

விஜயகாந்த் பாஜக கூட சேர்ந்திருந்தாலாச்சும் கட்சி உடையுறது தப்பிச்சிருக்கும். தனித்துப்போட்டின்னு அறிவிச்சு, இந்த தேர்தலோட கட்சியையும் காலி பண்ணப்போறாரு.

ரஸீம் கஸாலி

விஜயகாந்த் உப்புதான். உப்பில்லாமல் கூட சமைத்துவிடலாம். உப்பை மட்டுமே வைத்து சமைக்க முடியாது. அதாவது விஜயகாந்த் கூட்டணியில்லாமலும் ஜெயிக்கலாம். ஆனால் விஜயகாந்த் மட்டும் தனியாக ஜெயிக்க முடியாது. இந்த முடிவால் விஜயகாந்த் சில தொகுதிகளில் வாக்குகளை பிரிக்கலாம். அல்லது யாருக்கும் மெஜாரிட்டி கூட கிடைக்காமல் செய்யலாம். ஆனால் விஜயகாந்தால் ஆட்சிக்கட்டிலில் அமரவே முடியாது என்பதுதான் இப்போதைய நிதர்சனம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x