Published : 25 Sep 2021 03:43 PM
Last Updated : 25 Sep 2021 03:43 PM
இந்தியாவின் தலைசிறந்த பின்னணிப் பாடகரும் 16 மொழிகளில் நாற்பதாயிரத்துக்கு மேற்பட்ட பாடல்களைப் பாடியவருமான எஸ்.பி.பாலசுப்ரமணியம் நினைவு நாள் இன்று.
இந்த நிலையில் அவரது காலத்தால் அழியாத பாடல்கள் குறித்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
அவற்றின் தொகுப்பு:
Raajaachandrasekar
எஸ்பிபி - பாடல் சுரக்கும் இசைமண்.
யாதுமாகி
காலம் எவ்வளவு வேகமா ஓடுது...நேத்து நடந்த சம்பவம் போல இருக்கு அதுக்குள்ற 1 வருசம் ஓடிடுச்சு....
எத்தனை வருசங்கள் ஆனாலும் என்ன..உங்க குரல் கேட்காத எங்கள் நாட்கள் ஆரம்பமோ முடிவோ பெறாதே எஸ்பிபி சார்...
MI OTIS
எனக்கு எஸ்பிபி ன்னு சொன்னதும் மைண்ட்ல வர முதல் பாட்டு "மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
Hari Mahalingam Flag of India
எஸ்பிபி என்றாலே நினைவுக்கு வந்துவிடுகிறது இந்தப் பாடல் !
"போகும் பாதை தூரமே
வாழும் காலம் கொஞ்சமே
ஜீவ சுகம் பெற ராக நதியினில் நீ நீந்தவா
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்
கேளாய் பூமனமே... ஹோ..."
எஸ்.பி.பி பற்றிய நினைவுகள்..!
அது என்றென்றும் நிலைத்திருக்கும்..!
இரவாதன்
என் வாழ்வின் பெரும்பாலான தருணங்களை எடுத்துக் கொண்டவர்கள்
இசைச்சாமி இளையராஜா மற்றும் பாடுநிலா பாலசுப்பிரமணியம்....
M.Sakthivel Rajan
கலைத்துறையின் தெவிட்டாத இசைக்கும் குரலுக்கும் சொந்தக்காரர் மறைந்த பத்மஸ்ரீ எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு அரசு சார்பில் மணிமண்டபம் கட்டினால் அது அந்த தெவிட்டாத தேன்குரலுக்கு செலுத்தும் மரியாதையாய் இருக்கும், தமிழக முதல்வர்
இதனை பரிசீலனை செய்ய வேண்டும்.
Raamraaj
பல மொழிகள்,பல தெய்வங்கள்,பல ராகங்கள் மற்றும் பல ஆயிரம் பாடல்களை தனது தேன் இசை குரலால் சாதித்த S P பாலசுப்பிரமணியம் அவர்களின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று.
Kannan Duraisingam
பத்ம பூஷன்,பத்மஸ்ரீ, மாநில அரசு விருதுகள் என பல்வேறு விருதுகளை பெற்றவர், காலத்தால் அழியாத பல பாடலைப் பாடியவர், தன் இனிய குரலால் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த #எஸ்.#பி.#பாலசுப்பிரமணியம் அவர்களின் நினைவுநாளில் அவரது இசை சாதனைகளை போற்றுகிறேன்.
Siddhu_Siddharth
It is very hard to believe that it is been 1year since you have left us…Remembering on his 1st death anniversary,the legend & the voice which touched the soul of every individual which loves music ..We miss u #SPBalasubrahmanyam #SPBForever #Legend #RememberingSPB pic.twitter.com/uLOXTqPV9T
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT