Published : 18 Sep 2021 03:11 AM
Last Updated : 18 Sep 2021 03:11 AM
இந்தியப் பெருங்கடலின் பரப்பளவு 73,440,000 சதுர கிலோமீட்டராகும்.
பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியப் பெருங்கடல் தோன்றியிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா அண்டார்டிகா ஆகிய 4 கண்டங்களை இந்தியப் பெருங்கடல் இணைக்கிறது.
உலகின் நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பங்கை இந்தியப் பெருங்கடல் கொண்டுள்ளது.
பனிப்பாறைகள் உருகி வருவதால், இந்தியப் பெருங்கடலின் பரப்பளவு ஆண்டுதோறும் 20 சென்டிமீட்டர் வரை அகலமாகி வருகிறது.
உலகுக்கு தேவையான எண்ணெய்யில் சுமார் 40 சதவீதம், இந்தியப் பெருங்கடலின் ஆழத்தில் இருந்து எடுக்கப்படுகிறது.
கப்பல்களில் இருந்து கசியும் எண்ணெய்யால் ஆண்டுதோறும் அதிக அளவிலான சுற்றுச்சூழல் மாசுபாடு இந்தியப் பெருங்கடலில் ஏற்படுகிறது.
இந்தோனேசியாவுக்கு அருகில் உள்ள சுண்டா டிரெஞ்ச் என்ற பகுதி இந்திய பெருங்கடலின் ஆழமான (25,344 அடி) பகுதியாகும்.
இந்தியப் பெருங்கடலில் உள்ள நீரின் வெப்பநிலை அதிகம் என்பதால், மற்ற கடல்களுடன் ஒப்பிடும்போது குறைந்த அளவிலான நீர்வாழ் உயிரினங்களே இதில் உள்ளன.
இந்தியப் பெருங்கடலில் இலங்கை, மொரிஷியஸ் உள்ளிட்ட 7 தீவுகள் உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT