Published : 15 Sep 2021 03:10 AM
Last Updated : 15 Sep 2021 03:10 AM
பக்கிங்காம் அரண்மனை 1703-ம் ஆண்டில் இங்கிலாந்து கட்டிட வடிவமைப்பாளரான வில்லியம் விண்டேவால் கட்டப்பட்டது.
இங்கிலாந்து அரச குடும்பத்துக்குச் சொந்தமான இந்த அரண்மனை, 39 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.
19-ம் நூற்றாண்டில் இந்த மாளிகையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன.
இந்த அரண்மனையில் 775 அறைகள் உள்ளன. இதில் 52 அறைகள் அரச குடும்பத்தினர் மற்றும் அவர்களின் விருந்தினர்கள் தங்குவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
பக்கிங்காம் அரண்மனையில் 760 ஜன்னல்களும், 1,514 கதவுகளும் உள்ளன.
பக்கிங்காம் அரண்மனைக்குள் பல்வேறு சுரங்கப் பாதைகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மானியர்கள் 9 முறை இந்த அரண்மனை மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த அரண்மனைக்குள் 350 சுவர் கடிகாரங்கள் உள்ளன. இதை பராமரிப்பதற்காகவே ஒருவர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்.
ஹெலிகாப்டர் தளம், பிரம்மாண்ட தோட்டம், ஏரி, நீச்சல் குளம் ஆகியவையும் இந்த அரண்மனைக்குள் அமைந்துள்ளன.
அரண்மனையின் கிழக்குப் பகுதியில் உள்ள பால்கனியில் நின்றுகொண்டு மக்களை சந்திப்பதை இங்கிலாந்து அரச குடும்பத்தினர் வழக்கமாக கொண்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT