Published : 15 Jun 2014 01:00 AM
Last Updated : 15 Jun 2014 01:00 AM
இப்போதெல்லாம் ஒரு படம் வெற்றிபெற்றால், அந்தப் படத்தின் திரைக்கதை மற்றும் வசனங்கள் புத்தக வடிவில் வெளியிடப் படுவது வியாபாரம் சார்ந்த ஒரு விஷயமாகிவிட்டது. ‘அஞ்சாதே’, ‘சுப்ரமணியபுரம்’ என்று பல திரைப்பட வசனப் புத்தகங்கள் வெளியாகியிருக்கின்றன.
ஆனால், முதல்முறையாக ஒரு திரைப்படத்தின் வசனங்கள் புத்தகமாக வெளியிடப்பட்டது எம்.ஆர். ராதா நடித்த ‘ரத்தக்கண்ணீர்’ படத்துக்குத்தான். படம் வெளியாவதற்கு முன்பாகவே புத்தகம் வெளியானதுதான் இதன் விசேஷம்.
1954-ம் ஆண்டு நவம்பர் 6-ம் தேதி ‘ரத்தக்கண்ணீர்’ திரைப்படமாக வெளிவந்து, மாபெரும் வெற்றிபெற்றது என்பது வரலாறு. ஆனால், அதற்கு 7 மாதங்களுக்கு முன்பாக சென்னைக்கு அடுத்த திருவள்ளூரைச் சேர்ந்த மாணிக்கவாசகம் என்பவர், வாசு பதிப்பகத்தின் மூலம் இந்தப் படத்தின் வசனங்களைத் தனிப் புத்தகமாக வெளியிட்டார்.
‘ரத்தக்கண்ணீர்’ நாடகமாக வெற்றிநடைபோட்டுக்கொண்டிருந்தபோது, இந்த நாடகத்தின் வசனங்களைத் தனிப் புத்தகமாக வெளியிடவும் நாடகத்தை நடத்தவும் எம்.ஆர். ராதாவிடம் மாணிக்கவாசகம் உரிமை கோரினார். அதற்கு ஒப்புக்கொண்ட எம்.ஆர். ராதா, உரிமையை வழங்க, தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முறையாக ஒரு திரைப்படம்
வெளியாகும் முன்பாகவே அதன் வசனப் புத்தகம் வாசகர்களின் கைகளில் தவழ்ந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT