Published : 03 Sep 2021 03:14 AM
Last Updated : 03 Sep 2021 03:14 AM
செப்டம்பர் 2-ம் தேதி, உலக தேங்காய் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
மாலத்தீவின் தேசிய மரமாக தென்னை மரம் உள்ளது.
உலகில் ஆண்டுதோறும் சுமார் 61 மில்லியன் டன் தேங்காய்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
தென்னை மரங்கள் அதிகபட்சமாக 25 மீட்டர்கள் வரை வளரும்.
தேங்காய் உற்பத்தியில் இந்தோனேசியா முதல் இடத்தில் உள்ளது. அதற்குஅடுத்த இடங்களில் பிலிப்பைன்ஸ், இந்தியா ஆகிய நாடுகள் உள்ளன.
சில நாடுகளில் தேங்காய்களைப் பறிக்க குரங்குகள் பயன்படுத்தப்படுகின்றன.
தென்னை மரங்கள் பொதுவாக 6 ஆண்டுகளில் காய்க்கத் தொடங்கும்.
ஒரு மரத்தில் இருந்து ஆண்டுக்கு 75 தேங்காய்கள் வரை கிடைக்கும்.
காட்டுப்பகுதிகளில் உள்ள தென்னை மரங்கள் 100 ஆண்டுகள் வரைகூட அழியாமல் இருக்கும்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் துணை அதிபர் இல்லம் மற்றும் அலுவலகம், அதிக அளவில் தென்னை மரத்தை பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT