Last Updated : 19 Jun, 2014 11:00 AM

 

Published : 19 Jun 2014 11:00 AM
Last Updated : 19 Jun 2014 11:00 AM

வாகனப் பதிவு நடைமுறைகள்

வாகனப் பதிவு என்றால் என்ன?

வாகனப் பதிவு என்பது அந்த வாகனத்தின் அடையா ளம். சம்பந்தப்பட்ட வாகனத்தின் முழு விவரமும் வாகனப் பதிவு சான்றிதழில் இடம் பெறும்.

ஏன் வாகனப் பதிவு செய்ய வேண்டும்?

25 சி.சி. திறன் தொடங்கி அதற்கு அதிகமான சி.சி. திறன் கொண்ட வாகனங்கள் எதுவும் மோட்டார் வாகன சட்டத்தின்படி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யப்படாமல் சாலையில் இயங்கக் கூடாது. அதற்காக வாகனத்தை பதிவு செய்ய வேண்டும்.

எத்தனை நாட்களுக்குள் வாகனத்தைப் பதிவு செய்ய வேண்டும்?

வாகனத்தை வாங்கியதில் இருந்து 7 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட வாகனம் வட்டார போக்குவரத்து அலுவலகம் அல்லது மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத் தில் பதிவு செய்யப்பட வேண்டும். மோட்டார் வாகனச் சட்டப்

படி பதிவு செய்யாமல் வாகனங்களை சாலையில் இயக்கக் கூடாது. அவ்வாறு இயக்குவது சட்டப் படி குற்றமாகும். அப்படி இயக்கினால் அபராதம் விதிக்கப் படும்.

வாகனப் பதிவில் என்னென்ன வகைகள் உள்ளன?

தற்காலிக மற்றும் நிரந்தரப் பதிவு என இரு வகை உண்டு. சிலர் வாகனத்தை சொந்த மாவட்டம், மாநிலம் நீங்கலாக வேறு இடத்தில் வாங்க நேரிடும். எனினும் பதிவு செய்யாமல் வாகனங்களை சாலையில் இயக்கக்கூடாது என்பதால், வாகனம் வாங்கிய இடத்தில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இது தற்காலிகப் பதிவு. இந்தப் பதிவு ஒரு மாத காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும். அதற்குள் தங்களது வாகனங்களை சம்பந்தப்பட்ட உரிமையாளர் தங்கள் சொந்த ஊருக்கு எடுத்து வந்து நிரந்தரப் பதிவு செய்து கொள்ளவேண்டும்.

வாகனப் பதிவுக்கான வழிமுறைகள் என்ன?

வாகன விற்பனையாளர், அதை வாங்குவோரிடம் பதிவு செய்யாமல் வழங்கக் கூடாது என மோட்டார் வாகனச் சட்டம் சொல்கிறது. அதன்படி படிவம் 20, 21 உட்பட இருப்பிடச் சான்று, வாகனத்தை விற்பனை செய்ததற்கான படிவம் மற்றும் வாகனத்தை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு கொண்டு வந்து பதிவு செய்து கொள்ள வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x