Published : 27 Aug 2021 03:11 AM
Last Updated : 27 Aug 2021 03:11 AM

பளிச் பத்து 58: செல்போன்

தொகுப்பு:பி.எம்.சுதிர்

மோடோரோலா நிறுவனத்தைச் சேர்ந்த மார்ட்டின் கூப்பர் என்ற பொறியாளர், 1973-ம் ஆண்டு ஏப்ரல் 3-ம் தேதி முதலாவது செல்போனை தயாரித்தார்.

உலகின் முதல் செல்போனின் எடை 1.1 கிலோவாக இருந்தது.

முதல் முறையாக விற்பனைக்கு வந்தபோது செல்போனின்விலை 4 ஆயிரம் டாலர்களாக (ரூ.2.97 லட்சம்) இருந்தது.

உலகின் முதலாவது ஸ்மார்ட் போன் 1994-ம் ஆண்டில் ஐபிஎம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.

70 சதவீதம் செல்போன்கள் சீனாவில் தயாரிக்கப்படுகின்றன.

தற்காலத்தில் கம்ப்யூட்டர்களைவிட அதிக ஆற்றல் வாய்ந்தவையாக செல்போன்கள் உள்ளன.

செல்போனில் இருந்து வரும் அதிர்வலைகளால் தலைவலி ஏற்பட வாய்ப்பு உள்ளது.

நாளொன்றுக்கு 2 மணி நேரத்துக்கும் மேல் செல்போன்களை பயன்படுத்துபவர்கள், மன அழுத்த நோயால் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.

செல்போனை பயன்படுத்துபவர்கள், நாளொன்றுக்கு அதைச் சராசரியாக 150 முறையாவது பார்ப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பின்லாந்து நாட்டில் 2000-ம் ஆண்டு முதல், ஒவ்வொரு ஆண்டிலும் செல்போன்களை அதிக தொலைவுக்கு தூக்கியெறியும் போட்டி நடைபெற்று வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x