Published : 19 Aug 2021 03:11 AM
Last Updated : 19 Aug 2021 03:11 AM
உலகின் முதல் புகைப்படம் 1826-ம் ஆண்டில் எடுக்கப்பட்டது. ஜோசப் நீசஃபர் நீப்ஸ் என்பவர் இப்படத்தை எடுத்தார்.
உலகின் முதல் கலர் புகைப்படம், 1861-ம் ஆண்டில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ் மேக்ஸ்வெல் என்பவரால் எடுக்கப்பட்டது.
மெகாபிக்சல் என்ற வார்த்தை, 1984-ம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்தது.
உலகின் முதல் போட்டோ ஸ்டுடியோ, நியூயார்க் நகரில் 1925-ம் ஆண்டில் அமைக்கப்பட்டது.
பீட்டர் லிக் என்பவர் எடுத்த புகைப்படம்தான், உலகிலேயே மிக அதிகமாக 6.5 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டது.
1839-ம் ஆண்டு முதலே கேமராக்களில் செல்ஃபிக்கள் எடுக்கப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு ஆண்டிலும் ஆகஸ்ட் 19-ம் தேதி, ‘உலக போட்டோகிராபி தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது.
1851-ம் ஆண்டில் முதல் முறையாக சூரிய கிரகணம் புகைப்படமாக எடுக்கப்பட்டது.
டிஜிட்டல் கேமரா, 1975-ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.
மும்பையைச் சேர்ந்த திலீஷ் பரேக் என்பவர், 4,425 கேமராக்களை சேகரித்து வைத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT