Published : 08 Aug 2021 03:17 AM
Last Updated : 08 Aug 2021 03:17 AM
ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் 60-க்கும் மேற்பட்ட கழுகு வகைகள் உள்ளன.
மனிதர்களைவிட 10 மடங்கு அதிகமாக ஒரு பொருளை பற்றிக்கொள்ளும் ஆற்றல் கழுகுகளுக்கு உள்ளது.
கழுகுகள் , மலை உச்சிகளில் தங்கள் கூடுகளைக் கட்டும்.
பல்வேறு நாடுகளிலும் சுதந்திரத்தின் சின்னமாக கழுகுகள் பார்க்கப்படுகின்றன.
கழுகுகளால் 210 டிகிரி வரை கழுத்தைத் திருப்ப முடியும்.
மனிதர்களைவிட 8 மடங்கு கூர்மையான பார்வையை கழுகுகள் கொண்டுள்ளன. 3.2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள முயல்களைக்கூட அவற்றால் பார்க்க முடியும்.
பறவை இனங்களில் கழுகுகள் புத்திசாலித்தனம் மிக்கவையாக கருதப்படுகின்றன.
பெரும்பாலும் நண்டுகள், பாம்புகள், மீன் ஆகியவற்றை உண்ணும்.
கழுகுகள் வசந்த காலத்தில் 3 முட்டைகள் வரை இடும்.
மிகப்பெரிய கழுகுகள், சிறகை விரித்த நிலையில் 8 அடி அகலம் வரை இருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT