Published : 04 Aug 2021 03:19 AM
Last Updated : 04 Aug 2021 03:19 AM
டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று குத்துச்சண்டை அரையிறுதிப் போட்டியில் ஆடவுள்ள லோவ்லினா போர்கோஹெய்ன், அசாமில் உள்ள கோலாகாட் மாவட்டத்தில் 1997-ம் ஆண்டில் பிறந்தார்
லோவ்லினாவின் அப்பா, சிறிய அளவில் தேயிலை எஸ்டேட் வைத்துள்ளார்.
சந்தியா குருங் என்ற பயிற்சியாளரிடம் லோவ்லினா பயிற்சி பெற்றார்.
லோவ்லினாவின் 2 மூத்த சகோதரிகளும் கிக் பாக்ஸிங்கில் பயிற்சி பெற்று வந்தனர். அவர்களைப் பின்பற்றி லோவ்லினாவும் முதலில் கிக் பாக்ஸிங் பயிற்சியில் ஈடுபட்டார்.
லோவ்லினாவுக்கு முகமது அலி, மேரி கோம் ஆகியோர் ரோல் மாடலாக இருந்துள்ளனர்.
2012-ம் ஆண்டுமுதல், இந்திய விளையாட்டு ஆணையத்தில் லோவ்லினா குத்துச்சண்டை பயிற்சி பெற்றார். சில ஆண்டுகளிலேயே தேசிய அளவிலான போட்டிகளில் வென்றார்.
2018-ம் ஆண்டில் நடந்த உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று உலகின் கவனத்தை லோவ்லினா ஈர்த்தார்.
2020-ம் ஆண்டு மார்ச் மாதத்திலேயே ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். இதன் மூலம் ஒலிம்பிக்குக்கு தகுதிபெற்ற முதல் அசாம் பெண் என்ற பெருமையைப் பெற்றார்.
2020-ம் ஆண்டில் மத்திய அரசு, இவருக்கு அர்ஜுனா விருது வழங்கியது.
ஒலிம்பிக்கில் பதக்கம் பெறும் 3-வது இந்தியர் என்ற பெருமையை லோவ்லினா பெற்றுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT