Published : 03 Feb 2016 04:19 PM
Last Updated : 03 Feb 2016 04:19 PM
'இனிமையானது தமிழ் மொழி; கடினமானது தமிழ் இலக்கணம்' என்பார்கள். தமிழ் இலக்கணத்தை எளிமையான முறையில், கற்றுக் கொடுக்கிறார் ஆசிரியர் ரா.தாமோதரன். அரசுப் பள்ளி ஆசிரியரான தாமோதரன், யூடியூபில் தனது பாடங்களை ஏற்றி, தொழில்நுட்பத்தின் வழியாக இலக்கணத்தைக் கற்பிக்கிறார்.
தமிழ் மொழியின் சிறப்பெழுத்தான 'ஃ' உருவானது எப்படி, மகரக்குறுக்கத்தின் போது குறையும் மாத்திரைகளின் அளவு ஆகியவை மாணவச் செல்வங்களின் வழியாகக் கற்பிக்கப்படுகின்றன.
இலக்கணம் தவிர மாணிக்கவாசகர் பாடல்கள், விழிப்புணர்வு வாசகங்கள், சிலப்பதிகாரம் உள்ளிட்டவைகளும் விளக்கப்பட்டிருக்கின்றன. காணொலிகளை, மாணவர்களின் குரலிலும், சக ஆசிரியர்கள் வழியாகவும் விளக்குவது சிறப்பு.
ஆய்தக்குறுக்கம்
மூவிடப்பெயர்கள்
மெய்தான் அரும்பி - மாணிக்கவாசகர் பாடல்
தஞ்சாவூர் மாவட்டம், மெலட்டூர் ஒன்றிய அரசுப் பள்ளியில் வேலை பார்க்கும் தாமோதரன், தன் முயற்சி குறித்து என்ன சொல்கிறார்?
"எங்களின் இந்த முயற்சிக்கு முக்கியக் காரணங்கள் மூன்று.
1. மல்டிமீடியா வழியாக தமிழ் இலக்கணத்தைக் கற்பிக்க வேண்டும்.
2. மாணவர்களின் தனித்திறனை வெளிப்படுத்த வேண்டும்.
3. தனியார் பள்ளிகளில் தமிழ் இலக்கணத்தை முறையாகக் கற்பிப்பதில்லை என்ற கருத்து நிலவுகிறது. அந்த மாணவர்களும், சீரிய தமிழைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
தமிழ் இலக்கணத்தைப் பற்றிய முறையான வீடியோக்கள், இதுவரை இணையத்தில் வரவில்லை. வந்த சிலதும் பயிற்சி டுட்டோரியல்களாகத்தான் இருக்கின்றன. குறுங்காணொலிகளாக இருக்கும் இவற்றை, இன்னும் விரிவுபடுத்தும் திட்டமும் இருக்கிறது.
இப்போது பத்தாம் வகுப்புப் பாடங்கள் முழுவதும், எழுத்து வடிவில்தான் காணொலிகளாக வந்துள்ளன. அவை அனைத்தையும், படங்கள் வடிவிலான காணொலிகளாக மாற்றும் முயற்சியில் இருக்கிறோம்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT